/indian-express-tamil/media/media_files/2025/03/15/mKs5R0TTdEwOUdPbFCqw.jpg)
புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில் உரிய அனுமதியின்றி செம்மண் எடுத்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில் உரிய அனுமதியின்றி செம்மண் எடுத்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்து சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. சுமார் 3500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆரோவிலில் பெரும்பாலும் செம்மண் காடுகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில், ஆரோவில்லில் உள்ள மாத்திர் மந்திர் அருகே உரிய அனுமதியின்றி ஆரோவில் நிர்வாகம் செம்மண் எடுப்பதாக வருவாய் துறை மற்றும் ஆரோவில் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, வருவாய்த் துறையினர் மற்றும் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் அவர்கள் உரிய ஆவணமின்றி செம்மண் எடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மண் அள்ள பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரோவில்லில் சாலை அமைக்க மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது ஆரோவில் நிர்வாகத்தினர் செம்மண் எடுத்த சம்பவம் ஆரோவில்வாசிகள் மற்றும் உள்ளூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.