புதுச்சேரியில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத கல்வித்துறை இயக்குனரை கண்டித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து சம்பளம் வழங்க வேண்டும், என்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தும் கல்வித்துறை இயக்குனரை கண்டித்து கல்வித்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஊழியர்கள் சங்க சம்மேளன கௌரவ தலைவர் பிரேமதாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டம்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்,ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அதேபோல், புதுச்சேரியில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கருப்பு கொடியுடன் வழக்கு தொடுத்த அய்யாசாமி தீர்ப்பு நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை பணி நீக்கப்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி, பொதுப்பணித்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். ஆனால் இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.
புதுச்சேரியில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 9 நாட்களாக பணி நீக்கப்பட்ட ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில், காமராஜர் சிலை அருகே ஒன்று கூடிய பணி நீக்கப்பட்ட ஊழியர்கள், கருப்பு கொடியுடன் வழக்கு தொடர்ந்த அய்யாசாமி தீர்ப்புகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சட்டமன்றம் நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.