புதுச்சேரி மாநிலத்தில் உள்ளூர் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களையும் சேர்த்து 39 நாட்கள் விடுமுறை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பொது விடுமுறையானது 4 பிராந்தியங்களிலும் அறிவிக்கப்படும். மேலும், புதுச்சேரி காரைக்கால் பிராந்தியம், மாஹே, யானம் பிராந்தியம் என தனித்தனியாகவும் விடுமுறைகள் உள்ளூர் திருவிழாக்களுக்காக அறிவிக்கப்படுகின்றன.
அதன்படி புதுச்சேரி மாநில அளவில் வரும் 2025 ஆம் ஆண்டில் புத்தாண்டு தினம், பொங்கல், திருவள்ளுவர் தினம் என ஜனவரியில் 3 நாட்களும், மார்ச்சில் ரம்ஜான், ஏப்ரலில் வங்கிக்கணக்கு நிறைவு, தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என 3 நாட்களும், மே மாதத்தில் மேதினத்துக்கும், ஜூனில் பக்ரீத் பண்டிகைக்கும், ஆகஸ்டில் சுதந்திர தினம், டி ஜூர் டிரான்ஸ்பெர் தினம், விநாயகர் சதுர்த்தி என 3 நாட்களும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,செப்டம்பரில் மிலாது நபி, அக்டோபரில் சரஸ்வதி பூஜை, காந்திஜயந்தி, தீபாவளி என 3 நாட்களும், நவம்பரில் புதுச்சேரி விடுதலை நாள், டிசம்பரில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 18 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாஹேவில் பொது விடுமுறை நாட்களுடன் ஏப்ரலில் விஜூ விடுமுறை 2 நாட்கள், செப்டம்பரில் ஓணம், அக்டோபர் மகா நவமி, தெரசா பிறந்தநாள் என 5 நாட்கள் உள்ளூர் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. யானம் பிராந்தியத்தில் பொது விடுமுறைகளுடன் அம்பேத்கர் பிறந்தநாள் உள்ளிட்டவையும் விடுமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன் அனைத்துப் பிராந்தியங்களிலும் குறிப்பிட்ட முக்கிய திருவிழா நாட்களையும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களாக கூறப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 39 நாட்கள் விடுப்பை அரசு பணியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளூர் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களையும் சேர்த்து 39 நாட்கள் விடுமுறை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“