புதுச்சேரி கடலில் போலீசார் போலீசார் சோதனை செய்து அங்குள்ள மீனவர்களிடம் சுருக்குமடி வலை பயன்படுத்தப்பட்டால் காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
சுருக்குமடி வலை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.12 நாட்டிகள் மைல் தாண்டி தான் வலையை பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடிக்கிறார்களா…? என்பதனை புதுச்சேரி கடலோர காவல் நிலையம் போலீசார் இன்று சோதனை செய்தனர்.
புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து வீராம்பட்டினம், புதுகுப்பம், நல்லவாடு, பனித்திட்டு, நரம்பை, மூர்த்திகுப்பம் வரை 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரை போலீசார் சென்று சோதனையிட்டனர். காவல் கண்காணிப்பாளர் பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிட ம் தடை செய்யப்பட்ட நாட்களை தாண்டி சுருக்குமடி வலை பயன்படுத்தப்பட்டால் காவல் துறைக்கு தெரிவிக்க அப்போது அறிவுறுத்தினார்கள்.
சுருக்கு மடி வலை பயன்பாடுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா என்றும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையானது அடிக்கடி மேற்கொள்ளப்படும் என எஸ்பி பழனிவேல் தெரிவித்துள்ளார்.