புதுச்சேரி ரயில் நிலைய சீரமைப்புப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
புதுச்சேரி ரயில் நிலையம் ரூ.93 கோடியில் முழுமையாக புதுப்பிக்கப்பட உள்ளது. கடந்த 6 ஆம் தேதி காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் குபேர் அங்காடி வியாபாரிகள் முதலமைச்சர் ரெங்கசாமியுடன் சந்திப்பு: முக்கிய கோரிக்கை
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணி சென்னையைச் சோ்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய முகப்புப் பகுதி மேம்படுத்தப்படும். இருசக்கர வாகனம், கார்களை நிறுத்துவதற்கு தனித்தனி இடவசதி செய்துதரப்பட உள்ளது. இரண்டு முனையங்களுடன், பயணச் சீட்டு வழங்கும் பகுதி, வணிகப் பகுதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்கும்.
தற்போது முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தொடா்ந்து, திட்ட மேலாண்மை சேவைப் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil