புதுச்சேரியில் கடந்த சில நாட்களாள வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் புதுச்சேரியில் பரவலாக சாரல் மழை பெய்ததால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெய்யில் சுட்டெரித்தது. இதனால் நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் புதுச்சேரி நகரப் பகுதியான கடற்கரை சாலை, புதிய பேருந்து நிலையம், அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை, முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை மற்றும் வில்லியனூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், பாகூர், கனகசெட்டிகுளம், கன்னியகோவில் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
இந்த திடீர் சாரல் மழையால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. எனினும், இந்த மழையால் காலை நேரத்தில் பள்ளி – கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோருக்கு சற்று சிரமம் ஏற்பட்டது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.