வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதையடுத்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தொடர் மழையினால் பாதிப்பு ஏதேனும் நேர்ந்துள்ளதா என்றும் மழை வெள்ளம் போன்றவற்றை எதிர்கொண்டிட தொடர்புடைய அரசு துறைகளின் ஆயத்த நிலை குறித்தும் வெவ்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்
நிவாரண முகாம்கள், துறைவாரியான கட்டுப்பாட்டு மையங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், எச்சரிப்புக் கருவிகள், மீட்பு உபகரணங்கள், பொதுமக்களுக்கு லாசுப்பேட்டை, ஈ.சி.ஆர் சாலையில் உள்ள
மாநில அவசர கால செயல் மையத்திலும் பார்வையிட்டு வானிலை தொடர்பான எச்சரிக்கைகள் செய்தி
மூலமாக அனுப்பப்படுவது, வருவாய் துறையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால உதவி குழுக்கள், மீனவர்களுக்கு மீன்வளத்துறை மூலமாக கொடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கைகள் மற்றும் தீயணைப்பு துறையின் தயார் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர் மழையை எதிர்கொள்ள அவசரக்கால செயல் மையத்தின் கட்டுப்பாட்டு அறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“