/indian-express-tamil/media/media_files/2025/06/20/puducherry-register-2025-06-20-23-09-42.jpg)
புதுச்சேரியில் பத்திரபதிவுத்துறை அதிகாரி ஸ்ரீகாந்த் கழிவறையில் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக அரசு துறைகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறது, குறிப்பாக பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை நிலவுகிறது போலி பத்திரம் மற்றும் உயில்கள் மூலமாக கோவில் நிலங்கள், அரசு இடங்கள் மற்றும் தனியார் சொத்துக்களை அபகரிப்பு செய்வது அதிகரித்து உள்ளது.
முறைகேடாக சொத்துக்களை அபகரிக்கும் கும்பல்களுக்கு பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகின்றனர். இதற்காக பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு பல கோடிகள் லஞ்சமாக கைமாறுகிறது. கடந்த மாதம் புதுச்சேரி ஒயிட் டவுனில் மணக்குள விநாயகர் கோவில் அருகில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் போலி சான்றிதழ் மூலமாக அபகரித்துயுள்ளதாக புகார் எழுந்தது.
இந்த முறைகேட்டில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த்க்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட பதிவாளர் அலுவலகம் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அபகரிப்பு தொடர்பாக கவர்னரின் உத்தரவின்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் லஞ்ச புகாரில் சிக்கியுள்ளார்.
ஒரு பத்திரம் பதிவு செய்வதற்கு புதுச்சேரி சாரம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் உள்ள கழிவறையில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் லஞ்சம் வாங்கியுள்ளார். லஞ்சம் கொடுப்பதை சம்மந்தப் பட்டவர்கள் மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதனை தொடர்ந்து சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.