பெண் குழந்தைகள் பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பெண் குழந்தைகள் பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது. இத்திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்படுத்துகிறது.
இதையும் படியுங்கள்: தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: புதுச்சேரி அதிமுக
இந்த திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுச்சேரியில் குடியிருந்து இருக்கவேண்டும். 17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகள் கழித்து அந்த பணம் வழங்கப்படும். இந்த திட்டமானது விரைவில் அமலுக்கு வர உள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil