/indian-express-tamil/media/media_files/2025/08/11/puducherry-restro-bar-madurai-youth-death-case-13-bar-sealed-and-liecnce-cancelled-interim-tamil-news-2025-08-11-20-48-05.jpg)
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.
சென்னை தனியார் கல்லூரியில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் என்கிற வாலிபர், தனது பிறந்தநாளை கொண்டாட புதுச்சேரி வந்துள்ளார். அப்போது அவர் தமிழகத்தை சேர்ந்த வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த தன்னுடன் இளநிலை கல்லூரி, பள்ளியில் படித்தவர்கள் என 15-க்கும் மேற்பட்டோரை விருந்துக்கு அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் அனைவரும் புதுச்சேரி வந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள மது மற்றும் நடனத்துடன் கூடிய ஓ.எம்.ஜி (oh my gulp) என்கிற ரெஸ்டோ பாருக்கு அழைத்து சென்று அங்கு மது விருந்து அளித்துள்ளார்.
அப்போது அவர்களுக்குள்ளே சண்டை ஏற்பட்டு ஒருவருக்குகொருவர் வாக்கு வாதம் செய்ததால் அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அவர்களை வெளியே அனுப்புமாறு நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த பவுன்சர்கள் மற்றும் ரெஸ்டோ பார் ஊழியர்கள் அவர்களை பாரில் இருந்து சுமார் 12:30 மணியளவில் வெளியேற்றி உள்ளனர். ஆத்திரமடைந்த வாலிபர்கள் தங்களை ஏன் வெளியேற்றுனீர்கள் என பவுன்சர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு, சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த பார் ஊழியர் அசோக்ராஜ் என்பவர், நள்ளிரவு 1:30 மணியளவில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்துகொண்டு பாரின் கீழே இருந்த சண்முகப்பிரியனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். இதனை தட்டி கேட்ட ஷாஜினையும் இடுப்பில் அசோக்ராஜ் கத்தியால் குத்தியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சண்முகபிரியன் உயிரழ்ந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரது உடலை பிணவரையில் உடற்கூறு ஆய்வுக்காக வைத்துள்ளனர். அதேபோல் ஷாஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடையதாக அசோக்ராஜ், பவுன்சர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளை சேகரித்து எடுத்து சென்றனர். தொடர்ந்து நேரில் வந்த டிஐஜி சத்திய சுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் மற்றும் எஸ்.பிக்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக கொலை நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவர் பிறந்தநாள் மது விருந்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சக நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், புதுச்சேரி மக்களிடையே இச்சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இரவு 12 மணியுடன் ரெஸ்டோ பார்கள் மூட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்படுள்ள நிலையில், விதியை மீறி அதிகாலை 3 மணி வரை நடனத்துடன் ரெஸ்டோ பார்கள் இயங்கி வருவதால்தான் இச்சம்பவம் நடைபெற்றிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் ஒரு தெருவுக்கு 4 ரெஸ்ட் பார் உள்ளது முன்பு பொதுப்பணித்துறை அலுவலக எதிரே தெருவில் உள்ள மதுபாரில் வெளியே பிறந்தநாள் கொண்டாடிய போது மூலக்குளத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி வாலிபர் இறந்த சம்பவம் மறைவதற்குள் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது
அ.தி.மு.க கண்டனம்
புதுச்சேரி ரெஸ்ட்டோ பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான பெரிய கடை காவல் நிலையத்தில் பணி புரியும் அனைத்து காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், "புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ரெஸ்டோபரில் நடைபெற்ற மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் தமிழக இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ரெஸ்டோ பார் 12 மணி வரை செயல்பட வேண்டும் என்ற விதிவிலக்கு இருக்கும் போது அதிகாலை 3 மணி 4 மணி வரை செயல்படுவதை போலீசார் ஏன் கண்டு கொள்ளவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், "கத்தியால் குத்தப்பட்ட வாலிபரை மருத்துவமனைக்கு செல்ல விடாமல், ரெஸ்டோ பாரில் வாங்கிய மாமூலுக்காக விசுவாசத்தை காட்டு வகையில் கார் சாவியை பிடுங்கிக் கொண்டு ஒரு மணி நேரம் சார் காலதாமதம் படுத்தியதாலே இளைஞர் உயிரிழந்திருக்கிறார், இதற்கு காரணமான பெரிய கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அனைவரையும் பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நகரப் பகுதியில் உள்ள ஒவ்வொரு ரெஸ்ட்டோபாரிலும் 10க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பணி புரிகிறார்கள் இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய அவர் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். பார்களுக்கு அனுமதி கொடுப்பது மட்டும் காலால்துறை வேலை அல்ல அந்த பார்களை கண்காணிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும் ரெஸ்டோ பார்களில் போதை பொருட்களை விற்பனை செய்வது காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கிரைம் போலீசார் வரை அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ரெஸ்ஸ்டோ பார்களின் சட்ட விரோத செயல்களை கண்டித்து கட்சி மேல் இடத்தின் அனுமதி பெற்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரெஸ்டோ பார்க்களின் உரிமத்தை ரத்து செய்ய கோரி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அன்பழகன் எச்சரித்தார். இன்று மாலை காங்கிரஸ் சார்பில் ரெஸ்டோ பாருகளை கண்டித்து நேரு நேரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.