/indian-express-tamil/media/media_files/2025/06/14/OqMMDPnIEw91aXBwHch9.jpg)
கிரிப்டோ கரன்சி எனக்கூறி ரூ.100 கோடி மோசடி: 5 மாநில போலீசால் தேடப்பட்ட சைபர் கிரைம் குற்றவாளி கைது
கடந்த வருடம் லாஸ்பேட்டையைச் சேர்ந்த அசோகன் என்பவர் ரூ.98 லட்சம் கிரிப்டோகரன்சி மோசடியில் ஏமாந்து விட்டேன் என்று கொடுத்த புகார் தொடர்பாக மற்றும் அதன் தொடர்ச்சியாக 8 பேர் Hashpe கம்பெனியில் முதலீடு செய்து பணத்தை இழந்து விட்டோம் என்று மொத்தமாக ரூ.2.5 கோடிக்கு புகார்கள் குவிந்தது. இதுதொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இதுவரை 5 பேரை கைது செய்து சொகுசு கார் ஆகியவற்றை கைப்பற்றினர்.
அதே வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த தொழிலதிபர் மேற்படி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இம்ரான் பாட்ஷாவை ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமை காவலர்கள் மணிமொழி, அருண்குமார் மற்றும் காவலர்கள் ராஜ்குமார், வைத்தியநாதன் என்ற தனிப்படை போலீசாரால் இன்று காலை பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
வழக்கில் புதுச்சேரி சேர்ந்த 9 பேர் ரூ.2.5 கோடிக்கு மேல் பணத்தை இழந்திருப்பதும், நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் Hashpe என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கி பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்ததும் தெரியவந்துள்ளது. ஒரே நாளில் மேற்கண்ட கிரிப்டோ கரன்சியை மதிப்பில்லாமல் செய்து பணத்தை 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி செய்து விட்டதாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் புகார் எழுந்தது. இதையடுத்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், முதன்முறையாக புதுச்சேரி போலீசார் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான இம்ரான் பாட்ஷாவை கைது செய்துள்ளார். .அவர் அளித்த வாக்குமூலத்தில் பொதுமக்களிடம் மோசடியாக வசூலிக்கப்பட்டு தொகையை பல்வேறு நாடுகளுக்கு வங்கியின் மூலம் அனுப்பப்பட்டதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இந்த வழக்கில் 5-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மீது 5 மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்து தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.