சுற்றுலாவுக்கு வந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை: புதுச்சேரியில் சோகம்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் புதுச்சேரி தனியார் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் புதுச்சேரி தனியார் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Puducherry same family of 4 committed suicide drinking poison Tamil News

நேற்று வியாழக்கிழமை இரவு அறையை காலி செய்வதாக இருந்தனர். ஆனால், திடீரென ஒரு நாள் கூடுதலாக அறை வேண்டும் எனக் கேட்டு தங்கியுள்ளனர்.

பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி 

திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரஸ்வதி (48), மகன் சுதர்சன், மகள் சௌந்தரியா ஆகியோருடன் கடந்த 7 ஆம் தேதி இரவு புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் நகர பகுதியான முத்துமாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு பீனிக்ஸ் என்ற தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 

Advertisment

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு அறையை காலி செய்வதாக இருந்தனர். ஆனால், திடீரென ஒரு நாள் கூடுதலாக அறை வேண்டும் எனக் கேட்டு தங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று மதியம் அவர்கள் அறையை காலி செய்வதாக கூறி இருந்தனர். ஆனால் நேரமாகியும் அறை கதவு திறக்கவில்லை என்பதால், விடுதி ஊழியர் வெகு நேரமாக கதவை தட்டி பார்த்த போது அவர்கள் கதவை திறக்கவில்லை. 

இதனால் மாற்று சாவி கொண்டு கதவை திறந்து பார்த்துள்ளார்கள். அப்போது, அவர்கள் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விடுதி ஊழியர் பெரியக்கடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவல் அளித்துள்ளனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக திண்டுக்கல் காவல் நிலையத்திற்கும் புதுச்சேரி போலீசார் தகவல் கொடுத்து அவர்களது உறவினர்களுக்கு  தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற  https://t.me/ietamil

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: