சாலையில் குளம் போல் மழைநீர்; அரசு அதிகாரிகளுக்கு உணர்த்த சமூக ஆர்வலர் துணி துவைத்து நூதன போராட்டம்

புதுச்சேரியில் சாலையில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரில் சமூக ஆர்வலர் அழுக்கு துணி துவைத்து அதிகாரிகளுக்கு உணர்த்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுச்சேரியில் சாலையில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரில் சமூக ஆர்வலர் அழுக்கு துணி துவைத்து அதிகாரிகளுக்கு உணர்த்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
social activist pdy

புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர்ராஜன் எங்கே எல்லாம் நீண்ட நாள் பிரச்சனைகள் உள்ளதோ அதை தனது போராட்டத்தால் விழிப்புணர்வுடன் அரசுக்கு தெரிவித்து வருகிறார்.

புதுச்சேரியில் சாலையில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரில் சமூக ஆர்வலர் அழுக்கு துணி துவைத்து அதிகாரிகளுக்கு உணர்த்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .

Advertisment

புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர்ராஜன் எங்கே எல்லாம் நீண்ட நாள் பிரச்சனைகள் உள்ளதோ அதை தனது போராட்டத்தால் விழிப்புணர்வுடன் அரசுக்கு தெரிவித்து வருகிறார். நேற்று (17.08.205) மாலை முதல் இரவு வரை புதுச்சேரியில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி  நிற்கிறது.

கொக்கு பார்க் அருகில் குடிமை பொருள் வழங்கல் அலுவலகம் மற்றும் கலால் துறை அலுவலகம் செல்லும் சாலையில் மழை பெய்தால் எப்போதுமே தண்ணீர் தேங்கி நிற்கும் ஒவ்வொரு முறை சாலை போடும்போது சுத்தம் சுந்தர்ராஜன் அரசுக்கு மனு கொடுப்பது வழக்கம்.

அந்த மனுவில், அந்த சாலையின் மிக அருகில் பெரிய வாய்க்கால் ஓடுகிறது நீங்கள்  சாலை போடும்பொழுது தண்ணீர் வாட்டம்  காண்பித்தால் தண்ணீர் வாய்க்காலில் ஓடிவிடும். அங்கே தண்ணீர் தேங்கி நிற்காது. இதை ஏன் அரசு செய்ய முடியவில்லை என பலமுறை அரசுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் அரசு கண்டு கொள்வதில்லை.

எனவே நேற்று பெய்த மழையில் இன்று அப்பகுதியில் மழை தண்ணீர் தேங்கி நின்றது அந்த இடத்தில் இன்று மாலை சுத்தம் சுந்தர்ராஜன் ஒரு பையில் அழுக்கு துணி எடுத்து வந்து அங்கு கோமணம் கட்டிக்கொண்டு அழுக்குத் துணிகளை துவைத்து காய வைத்துள்ளார் .

Advertisment
Advertisements

இது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிகாரிகள்  வேடிக்கை பார்த்துவிட்டு சென்றனர். பலர் வீடியோ எடுத்துக் கொண்டு சென்றனர்.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்த அவரிடம் கேட்டதற்கு இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டங்களை நான் தொடர்ந்து நடத்துகிறேன். இன்னும் இரண்டு நாட்களில் புதுச்சேரி மின்சார வாரியத்தின் மூலம் கொடுக்கப்படும் பில்லில் தவறுதலாக பொது மக்களிடம் பணம் வசூல் செய்யப்படுவதை சுட்டி காட்டி தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்து உள்ளேன். ஏற்கனவே, மின்சாரத் துறை மூலம் அதிகமாக பில் பெறப்படுவதை கண்டித்து கோமணத்துடன் வந்து பில் கட்டி விட்டு  சென்றேன் என்று கூறினார்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: