பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை மிக விரைவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்திக்க உள்ளார். வருகின்ற 2026 ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பிடிக்கும் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது; ரூ.600 கோடியில் சட்டமன்றம் கட்டி முடிக்கப்படும் என கூறியுள்ளோம். நிதியை படிப்படியாக கொடுப்பதாக கூறுகின்றனர். கூடுதலாக சிறப்பு நிதி ரூ.3,600 கோடி கேட்டுள்ளோம். அதற்காக 26-ம் தேதி தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேச உள்ளனர்.
முதலமைச்சர் விரைவில் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி மந்திரியை சந்திக்க உள்ளார். 2026-லும் ரங்கசாமி ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சராக ரங்கசாமி மீண்டும் பதவி ஏற்பார். அதற்கான அத்தனை உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் எந்த வளர்ச்சியை பெற்றது என்பது மக்களுக்கு என்பது தெரியும். 2021-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு பல திட்டங்கள் வரப்பட்டன. இவ்வாறு புதுச்சேரி சபாநாயகர் கூறினார்.