Puducherry: பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் தேர்வு முடிவை வெளியிட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் மார்ச் - ஏப்ரல் - 2024 இல் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது பின்வருமாறு:-
புதுச்சேரி மற்றும் காரைக்கால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் பார்க்க லிங்க்: https://schooledn.py.gov.in/Exams/sslcResult.html
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 89.14 சதவீதம் ஆகும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 78.08 சதவீதம் ஆகும்.
கடந்த மாரச் மற்றும் ஏப்ரல்-2024 இல் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 7590 மாணவர்களும், 7362 மாணவிகளும் என மொத்தம் 14952 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று (10.05.2024) வெளியான தேர்வு முடிவுகளின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 13328 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 6527 மாணவர்களும் 6801 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் மொத்த தேர்ச்சி விழுக்காடு கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்: 89.14 %
புதுச்சேரி பகுதி: 91.28 %
காரைக்கால் பகுதி: 78.20 %
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்: 78.08 %
புதுச்சேரி பகுதி: 81.69 %
காரைக்கால் பகுதி: 65.31 %
கூடுதல் விவரங்கள் :
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உளள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை: 289
2023 -24 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த் தேர்ச்சி விகிதம்: 89. 14%
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை : 107
புதுச்சேரி பகுதியில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை: 90
காரைக்கால் பகுதியில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை: 17
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை: 108
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை: 8
புதுச்சேரி பகுதியில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை: 7
காரைக்கால் பகுதியில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை: 1
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
ஆங்கிலம் - 20
கணிதம் - 355
அறிவியல் - 77
சமூகவியல் - 101
மொத்தம் - 553
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அரசு பள்ளிகளில் பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
கணிதம் - 15
அறிவியல் - 3
சமூகவியல் - 4
மொத்தம் - 22.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.