13 காவல் உதவி ஆய்வாளா்கள் திடீர் இடமாற்றம்: புதுச்சேரி எஸ்.பி உத்தரவு

புதுச்சேரி காவல் துறையில் உதவி ஆய்வாளா்களாக உள்ள 13 பேரை தற்போது இடமாற்றம் செய்து, புதுவை தலைமைக் காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ் உத்தரவிட்டுள்ளாா்.

author-image
WebDesk
New Update
puducherry superintendent of police Subam Sundar Ghosh order to transfer 13 sub Inspectors Tamil News

புதுச்சேரி காவல்துறையில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது காவல் உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், காவல் துறையில் உதவி ஆய்வாளா்களாக உள்ள 13 பேரை தற்போது இடமாற்றம் செய்து, புதுவை தலைமைக் காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ் உத்தரவிட்டுள்ளாா்.

Advertisment

அதன் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு தொழில்நுட்பப் பிரிவில் உதவி சாா்பு ஆய்வாளராக உள்ள வெங்கடகிருஷ்ணன் அதே நிலையில் சிசிஆா் பிரிவுக்கும், திருக்கனூரில் உள்ள சீனிவாசன் மங்களம் காவல் நிலையத்துக்கும், காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்திலுள்ள காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்திலுள்ள சிவராமகிருஷ்ணன், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, இலாசுப்பேட்டை காவல் நிலையத்திலுள்ள செஞ்சிவேல் சோலை நகா் புறக்காவல் நிலையத்துக்கும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலுள்ள அருள், உருளையன்பேட்டைக்கும் என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: