புதுச்சேரியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி இருக்கிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்பேரில், புதுச்சேரியிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பூஜ்ஜிய நிலையில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரிக்க துவங்கி உள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
புதுச்சேரியில் 1,199 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியிள் 9 பேர் காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட் டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு 0.83 சதவீதமாகும். சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அதே நேரத்தில் 3 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் - 9,94,532 பேருக்கும், 2வது டோஸ் 8,67,890 பேருக்கும், பூஸ்டர் டோஸ் - 4,10,974 பேருக்கும் என மொத்தம் 22,73,396 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”