scorecardresearch

புதுச்சேரி- பெங்களூரு விமான சேவை தற்காலிக நிறுத்தம்: காரணம் என்ன?

புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விமான சேவை இன்று முதல் 17ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக விமான நிலைய துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

puducherry to bangalore flights stoped temporarily, spicejet, puducherry to bangalore flights stopped

புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விமான சேவை இன்று முதல் 17ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக விமான நிலைய துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் 80 பேர் பயணிக்க கூடிய இரண்டு விமான சேவைகள் புதுச்சேரியில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 17ஆம் தேதி வரை புதுச்சேரி பெங்களூர் விமான சேவை மட்டும் 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், புதுச்சேரி ஹைதராபாத் விமான சேவை வழக்கு போல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry to bangalore flights stopped temporarily airport officers announced