Advertisment

புதுச்சேரி - திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவை அறிவிப்பு; எப்போது தொடங்கும்?

புதுவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Why the delay in Chennai-Nellai Vande Bhara Train

வந்தே பாரத் ரயில் (கோப்பு படம்)

புதுவையிலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.

Advertisment

இந்த பட்டியலில் தற்போது புதுவையும் இடம்பெற்றுள்ளது. புதுவையிலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை திருப்பதி இடையிலான 340 கிமீ தூரத்துக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும். இந்த ரெயில் புதுவை, விழுப்புரம் சந்திப்பு, மதுராந்தகம், சென்னை சென்ட்ரல், அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

புதுவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில்சேவை வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Puducherry Tirupati
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment