/indian-express-tamil/media/media_files/2025/09/17/mbbs-puducherry-2025-09-17-09-40-52.jpg)
புதுச்சேரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஃபார்மா டி என்ற 6-வருட படிப்புக்கு கல்வி கட்டண குழு மூலம் கட்டணம் நிர்ணயிக்க, புதுச்சேரி துணைநிலை கவர்னர் சென்டர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கன்வீனர், முதல்வர் ஆகியோருக்கு புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் மு நாராயணசாமி மனு அனுப்பி உள்ளார்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆண்டு வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஃபார்ம் டி என்ற ஆறு வருட படிப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு சென்டடாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது ஆனால் இதற்கான கட்டணங்கள் என்னவென்று சுகாதார துறையும் வெளியிடவில்லை சென்டாக் இணையதளத்திலும் வெளியிடப்படவில்லை.
ஆனால் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சென்டாக் மூலம் சேர்க்கப்படும் மாணவர்கள் ஒரு ஆண்டுக்கு 2- லட்சத்து 75 ஆயிரம் கல்வி கட்டணம் மற்றும் கூடுதலாக இதர கட்டணங்கள் கட்ட வேண்டும் என்றும், நிர்வாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் ஒரு ஆண்டுக்கு கல்வி கட்டணம் 3-லட்சத்து 75 ஆயிரம் கல்வி கட்டணம் மற்றும் கூடுதலாக இதர கட்டணங்கள் கட்ட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறுவதால் பெற்றோர் மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள கல்வி கட்டணம் வசூலிக்க சுகாதாராத்துறை செயலகமும், சென்டாக் நிர்வாகமும், உயர்கல்வித்துறையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? இல்லை கல்லூரி நிர்வாகங்களில் தாங்கலாகவே கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளதா இதற்கு யார் அனுமதி அளித்தார்கள் என்ற சந்தேகங்களுக்கு சுகாதாராத்துறை செயலகமும், சென்டாக் நிர்வாகமும், உயர்கல்வித்துறையும் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் நலன் கருதி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இதே ஃபார்மா டி என்ற 6-வருட படிப்புக்கு சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் தான் வாங்குகிறார்கள் என்றும் ஆறு வருடத்திற்கு ஒன்பது லட்சத்திற்குள் இந்த படிப்பு முடித்து விடுவதாக மாணவர்கள் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே புதுச்சேரி அரசு உடனடியாக கல்வி கட்டண குழுவை கூட்டி இந்த ஆண்டே கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று மீண்டும் மாணவர்கள் நலன் கருதி கேட்டுக்கொள்கின்றோம் என கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.