புதுச்சேரியில் எஸ்.சி, எஸ்.டி மக்கள் நலத்திட்ட உதவி பெறுவதற்கு வருமான உச்சவரம்பை உயர்த்தும் அறிவிப்புக்கான அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2022 - 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எஸ்சி.எஸ்டி மக்கள் நலத்திட்டம் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட வருமான உச்சவரம்பு ரூபாய் 8 லட்சம்மாக உயர்த்துதல் மற்றும் எஸ்.சி-எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்வது சம்பந்தமான அரசாணை வெளியிட வேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் மாநில முதன்மை செயலர் தேவ.பொழிலன் தலைமையில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
எஸ்.சி -எஸ்.டி மக்களின் வருமான உற்சவரம்பு 8 லட்சமாக உயர்த்துவது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு அரசாணை வெளியிடவில்லை இதனால் எஸ்சி-எஸ்.டி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே உடனடியாக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என தேவபொழிலன் வலியுறுத்தினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.