scorecardresearch

முழுமையா விசாரிக்காம ஜி- பே பண்ணாதீங்க: புதுவையில் நூதன மோசடி

வீடு வாடகை விளம்பரம் மூலம் மோசடி; விசாரிக்காமல் கூகுள் பே மூலம் அனுப்பி பணத்தை இழந்த புதுச்சேரி பெண்

cyber crime
புதுவையில் நூதன மோசடி

புதுச்சேரி சித்தன்குடியைச் சார்ந்த ஒரு பெண் வாடகை வீடு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார். அப்பொழுது புதுச்சேரி லாஸ்பேட் கிருஷ்ணா நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் ஒரு அப்பார்ட்மெண்டின் பெயர், விலாசம், புகைப்படங்களுடன் இரண்டாவது மாடியில் வாடகைக்கு வீடு தயாராக உள்ளது என்று விளம்பரம் இருந்தது.

விளம்பரத்தின் கீழே விலாசம், செல் நம்பர் இருந்ததைப் பார்த்து தொடர்பு கொண்ட அந்தப் பெண் வாடகை மற்றும் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். எதிர் முனையில் தொலைபேசியில் பேசியவர் சொன்னதை அனைத்தும் நம்பி அவர்கள் வீட்டின் உரிமையாளர் என புரிந்து கொண்டு, அவர்கள் கொடுத்த கூகுள் பே அக்கவுண்டில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அட்வான்ஸ் தொகையாக அனுப்பி விட்டார்.

இதையும் படியுங்கள்: புதுவையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: திரைப்பட காட்சிகள் ரத்து

பணத்தை அனுப்பிவிட்டு பிறகு அந்த நபரிடம் தொடர்பு கொண்ட போது, அந்த நபர் தொலைபேசியை எடுக்கவில்லை. மேலும் எந்த தகவலும் அவர்களிடம் இருந்து கிடைக்காததால் ஆன்லைனில் கொடுத்த விலாசத்தில் சென்று அந்தப் பெண் பார்த்துள்ளார். அப்பொழுது அங்கு அடுக்குமாடி குடியிருப்பு இல்லாமல் இருந்ததை கண்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அந்தப் பெண் புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக இணைய வழி காவல் துறை ஆய்வாளர் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை சரிபார்த்த பொழுது அது ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே பொதுமக்கள் இது போன்ற இணைய வழியில் வருகின்ற தகவலை வைத்து பணத்தையும் யாருக்கும் செலுத்த வேண்டாம். இது போன்ற இணைய வழியில் வருகின்ற விளம்பரங்கள் இணைய வழி மோசடிக்காரர்களால் உருவாக்கப்பட்டு பொதுமக்களை ஏமாற்ற பயன்படுவதால், பொதுமக்கள் இணைய வழி விளம்பரங்கள் நம்பி யாருக்கும் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல் நிலையம் பொதுமக்களை எச்சரிக்கை செய்துள்ளது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry woman lost money from online fraud as home rental advertisement