Advertisment

தமிழக அரசு பேருந்தில் 25 பவுன் நகை திருட்டு; பெண்ணை அலைக்கழித்த புதுச்சேரி போலீசார்; ரங்கசாமி வீட்டிற்கே சென்று புகார்

நகை திருட்டு பற்றி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், உருளையன்பேட்டை காவல்நிலையம் செல்ல அறிவுறுத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry woman Went to CM Rangaswamy house to complain about police and 25 pounds of Jewelery missed in TN govt bus Tamil News

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், கோரிமேட்டில் முதல்வர் ரங்கசாமியை அவரின் வீட்டில் சந்தித்தனர்.

பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Advertisment

புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்தசாலை புதுநகர் கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சலீம். இவரதுமனைவி சுமைனா பானு (வயது 24). இவர் சென்னையில் உள்ள தனது தங்கையின் வளைகாப்புக்காக மாமியார் ஜீவா (55),  மற்றும் 3 ஆண் குழந்தைகளுடன் நேற்று மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து ஆட்டோவில் புதிய பஸ்நிலையம் சென்றார். அங்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் (டி.என்–02–1என்–1953) எண் கொண்ட அரசு பேருந்தில் சென்னைக்கு ஏறினார்.

அப்போது கையில் வைத்திருந்த சூட்கேசை லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்திருந்தார். அந்த சூட்கேசில் 25 பவுன் நகை, பணம் இருந்தது. பேருந்து காலாப்பட்டு பிள்ளைச்சாவடி அருகே சென்ற போது லக்கேஜில் வைத்திருந்த, சூட்கேசை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த சுமைனா பானு, தமது மாமியாருடன் சேர்ந்து கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினார். 

பேருந்து நடத்துநர் பேருந்தில் இருந்து யாரையும் இறங்கவிடாமல் காலாப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டுசென்றார். அங்கு பயணிகளை சோதித்தபோது சூட்கேஸ் கிடைக்கவில்லை. இது பற்றி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், உருளையன்பேட்டை காவல்நிலையம் செல்ல அறிவுறுத்தினர்.

இதையடுத்து, அவர்கள் இரவு உருளையன்பேட்டை போலீஸ்நிலையம் வந்து புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் புகாரை ஏற்க மறுத்து, சம்பவம் நடந்த இடத்தில் புகார் தெரிவிக்க கூறினர். இதனால் அவர்கள் கோட்டகுப்பம் போலீசாரிடம் சென்றனர். அவர்கள் தங்கள் மாநிலம் இல்லை 

என்பதால் புதுவையில் புகார் கொடுக்கும்படி கூறினர்.

இதனால் நள்ளிரவு ஒரு மணி வரை பாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதையடுத்து இன்று காலை திமுக தொகுதி பொறுப்பாளர் கோபாலை சந்தித்து போலீசார் புகார் எடுக்காததை பற்றி தெரிவித்தனர்.  பின்னர் பாதிக்கப்பட்டவர்களையும், அந்த பகுதி மக்களையும் அழைத்து கொண்டு தி.மு.க கோபால், எதிர்கட்சித்தலைவர் இரா. சிவா அவர்களை சந்தித்து முறையிட்டார்.

பின்னர் அனைவரும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், கோரிமேட்டில் முதல்வர் ரங்கசாமியை அவரின் வீட்டில் சந்தித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை முழுமையாக விளக்கினர். போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பது குறித்தும் தெரிவித்தனர்.

அப்போது, முதல்வர் ரங்கசாமி, உருளையன்பேட்டை போலீசாரை வீட்டுக்கு அழைத்து பேசி வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கண்டறிய உத்தரவிட்டார். மேலும், காவல் கண்காணிப்பாளர்கள் வீரவல்லபன், லட்சுமி சவுஜாமியா, பக்தவச்சலம் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment