Advertisment

பெண்ணுக்கு ஆபாச போட்டோ அனுப்பி மிரட்டல்: புதுச்சேரியில் வாலிபர் கைது

கைது செய்யப்பட்ட நபரின் செல்போனை ஆய்வு செய்தபோது 32 க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Police Net

புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு படித்துக்கொண்டே பியூடிசியன் மாடலிங் செய்து வருகிறார்.  மேலும் அவர் இனஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்கள் அனைத்தையும் பதிந்து வருகிறார். அவருடைய நண்பர்கள் பலரும் மாடலிங் செய்து வருகிறார்கள். அவர்களும் இவருடைய இன்ஸ்டாகிராமை பல ஆயிரம் நபர்கள் (follow) தொடர்கிறார்கள்.

Advertisment

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேற்படி மாடலிங் செய்கின்ற பெண்ணின் புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அதை மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து தன்னுடன் செல்போனில் பேச வேண்டுமாறும், என்னுடைய இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக வீடியோ காலில் வர வேண்டும். இல்லையென்றால் மார்பிங் செய்த புகைப்படங்களை எல்லாம் உங்கள் நண்பர்களுகெல்லாம் அனுப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக, இணையவழி முதுநிலை காவல்  கண்காணிப்பாளர் .நாரா சைத்தானியா இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் தியாகராஜன் வழக்கு பதிவு செய்து கடந்த 4 நாட்களாக விசாரணை செய்தனர் அந்த நபரைப் பற்றிய விவரம் தெரிந்தது.

மேலும் அந்த பெண்ணின் சக நண்பர்கள் சிலருக்கும் அவர்களுடைய புகைபடத்தையே இன்ஸ்டாகிராமில் இருந்து எடுத்து இதே போன்று ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பி மிரட்டியதும் தெரியவந்தது. நபருடைய செல்போன் கண்காணிக்கப்பட்டு அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்றவை இயக்கங்களை கண்டுபிடித்து அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் தியாகராஜன் பி.சி கீர்த்தி தலைமையில் தலைமை காவலர் மணிமொழி , காவலர் அருண்குமார் பெண் காவலர் ரோஸ்லின் மேரி அடங்கிய தனிப்படை அமைத்து  மேற்படி நபரை இன்று கைது செய்தனர்.

Advertisment
Advertisement

இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபர் கடலூர் மாவட்டம் திருவாமூர் பகுதி என்பதும் பண்ருட்டியில் தற்போது  குடியிருந்து வருகிறார் என்பதும் அவர் சென்னையில் ஒரு  தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்யும் ரூபசந்துரு (25) என்ற நபரை கைது செய்யப்பட்டார். அவருடைய செல்போனை ஆய்வு செய்தபோது 32 க்கும் மேற்பட்ட பெண்களை அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படங்களை திருடி மார்பிங் செய்து அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி ஆபாச வீடியோக்களை போட்டோக்களை அவர்களுக்கே அனுப்பி மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அவரின் செல்போனை பறிமுதல் செய்து மேற்படி நபரை கைது செய்து தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இது பற்றி இணையவழி முதுநிலை காவல்  கண்காணிப்பாளர் நாரா சைத்தானியா கூறுகையில், தங்களுடைய இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப் பேஸ்புக் போன்றவற்றை செக்யூரிட்டி ஆப்ஷன் என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள் இருக்கின்றதோ அனைத்தையும் பின்பற்றுமாறும் அப்படி பின்பற்றாவிடில் உங்களுடைய புகைப்படங்களை எளிதில் மற்றவர்கள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், இது போன்று தங்களுடைய புகைப்படங்களை எடுத்து இன்று கைது செய்யப்பட்டது போன்ற நபர்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படும் ஆகவே எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment