/tamil-ie/media/media_files/uploads/2023/02/digvijiya-singh1.jpg)
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் (கோப்பு படம்)
சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் புல்வாமா தாக்குதல் குறித்து ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது கேள்விகளை எழுப்பியதாக கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், செவ்வாயன்று மீண்டும் கேள்வி எழுப்பும் வகையில், "அப்பட்டமான உளவுத்துறை தோல்வி" காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் புல்வாமா சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர் என்று கூறினார்.
காங்கிரஸ் தனது கருத்துக்களால் "பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ்" வழங்குவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
இதையும் படியுங்கள்: நான் அதானியைப் பற்றி கேட்டேன், பிரதமர் என் குடும்பப் பெயரைக் கேள்வி எழுப்புகிறார்: மோடி மீது ராகுல் தாக்கு
Today we pay homage to the 40 CRPF Martyrs who died because of the blatant Intelligence Failure in Pulwama.
— digvijaya singh (@digvijaya_28) February 14, 2023
I hope all the Martyred Families have been suitably rehabilitated.
முன்னதாக, 2019 தாக்குதலில் கொல்லப்பட்ட துணை ராணுவ வீரர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாளில் இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “புல்வாமாவில் இந்த நாளில் நாம் இழந்த நமது வீரமிக்க வீரர்களை நினைவு கூர்கிறோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் எங்களைத் தூண்டுகிறது,” என்று பதிவிட்டார்.
Remembering our valorous heroes who we lost on this day in Pulwama. We will never forget their supreme sacrifice. Their courage motivates us to build a strong and developed India.
— Narendra Modi (@narendramodi) February 14, 2023
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முறியடிப்பதன் மூலமும், விழிப்புடன் இருப்பதன் மூலமும் அஞ்சலி செலுத்துகிறோம்.
"2019 ஆம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் நடந்த பயங்கரமான பயங்கரவாத தாக்குதலில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்க முடியாது. அவர்களின் வீரமும், அடங்காத துணிவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எப்போதும் உத்வேகமாக இருக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், “2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த துணிச்சலான ராணுவ வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். வீரமரணமடைந்த இந்த வீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இந்த நாடு தலை வணங்குகிறது. ஒட்டுமொத்த தேசமும் தங்கள் குடும்பங்களுடன் உறுதியாக நிற்கிறது,” என்று பதிவிட்டார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், புல்வாமாவில் தியாகிகளின் உயரிய தியாகத்திற்கு நாங்கள் தலைவணங்குகிறோம், என்று கூறினார்.
தாக்குதல் நடந்த இடத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, “புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி. அவர்களின் உயர்ந்த தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும்,” என்று பதிவிட்டார்.
पुलवामा आतंकी हमले के वीर शहीदों को भावपूर्ण श्रद्धांजलि।
— Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2023
उनका सर्वोच्च बलिदान भारत हमेशा याद करेगा। pic.twitter.com/a39Gpzuq2u
திக்விஜய சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “புல்வாமாவில் உளவுத்துறையின் அப்பட்டமான தோல்வியால் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறோம். அனைத்து தியாகிகளின் குடும்பங்களும் தகுந்த முறையில் புனர்வாழ்வளிக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன்,” என்று பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூன்வாலா கூறியதாவது: புல்வாமாவில் தியாகிகளுக்கு இந்தியா அஞ்சலி செலுத்தும் நாளில், திக்விஜய் சிங் மற்றும் காங்கிரஸ், பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் அளித்து, இந்தியாவைக் குறை கூறுகிறது! திக்விஜய் ஜி சமீபத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்பினார்! தனிப்பட்ட அறிக்கை அல்ல, மாறாக பாகிஸ்தானுக்கு மறைமுக ஆதரவை வழங்கும் காங்கிரஸின் நிறுவன அணுகுமுறை!!” என்று பதிவிட்டார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தாக்குதலின் போது எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்ததற்காக கடுமையாக சாடினார். "புல்வாமாவின் ஃப்ளாஷ்பேக் மூலம் நாடு துக்கமடைந்தாலும், நமது எதிர்க்கட்சித் தலைவர்கள்" சொன்னதை நினைவில் கொள்ளுங்கள் - ஒருபோதும் மறக்காதீர்கள்! ஒருபோதும் மறக்காதீர்கள், ”என்று அவர் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசில் அமைச்சராக இருக்கும் பூபேந்திர சிங் இந்தி ட்வீட்டில் கூறியிருப்பதாவது: “துணிச்சலான வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்வது காங்கிரசின் குணம். மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ்-இன் சதி பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் (திக்விஜய்) சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரத்தை கோரி இருந்தார்,” என்று பதிவிட்டு இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.