Advertisment

புல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
China signals shift: UNSC condemns Pulwama terror attack, names Jaish

pulwama, புல்வாமா

பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில், சி.ஆர்.பி.எஃப் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரர்களின் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

Advertisment

இது குறித்த முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதலுக்காக சுமார் 10 - 15 ஆர்.டி.எக்ஸ் அளவிளான வெடிபொருள் உபயோகித்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

புல்வாமா தாக்குதல் விசாரணை

தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (CFSL) தனி குழுக்கள் தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆய்வு செய்ய வந்தது. இந்த ஆய்வில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் உபயோகித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமின்றி, 15 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பம்போர் - அவந்திபோரா தேசிய நெடுஞ்சாலையில் இந்த தாக்குதலை நடத்த காரணம் என்ன? ஏன் இந்த இடத்தை தாக்குதலுக்கு தேர்வு செய்தார்கள்? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு தலைநகராக ஸ்ரீநகரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட லீபோர் இடத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. NIA மற்றும் CFSL ஆகிய இரண்டு அமைப்புகளும், தாக்குதல் நடைபெற்ற லீபோர் பகுதியில் நடத்திய ஆய்வின்போது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சில பொருட்களை தடவியல் சோதனைக்காக சேகரித்து சென்றனர். தேசிய பாதுகாப்பு படையின் தேசிய வெடிகுண்டு தரவு மையத்தின் (NBDC) ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து எந்த மாதிரியான IED இந்த தாக்குதலில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தனர்.

தாக்குதல் செய்யப்பட்ட கான்வாயில் பிற வாகனத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களிடமும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். மேலும், இந்த தாக்குதல் சம்மந்தமாக அல்லது சந்தேகத்திற்குரிய தொலைப்பேசி தொடர்புகளை புலனாய்வு அமைப்பினர் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். இரு நாட்டின் பார்டருக்கு இடையே ஏதேனும் சந்தேகத்திற்குரிய போன் கால் வந்ததா? அல்லது தாக்குதல் சமயம் சுற்றுவட்டாரத்தில் போன்கால் வந்ததா என்றும் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள்.

மேலும் தாக்குதல் நடத்திய வாகனம் லீதல் IED கொண்டிருந்தும் கவனிக்கப்படாமல் போனது, எனவே தாக்குதல் நடத்திய காரில் ஒரு நாள் முன்னதாகவே IED -க்களை காரில் பொருத்தியிருக்க கூடும் என்று விசாரணை மேற்கொள்பவர்கள் சந்தேகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ராணுவ வீரர்கள் மற்றும் சி.ஆர்.பிஎஃப் விரர்கள் காலை முதலே பாதுகாப்பு ரோந்தில் இருந்தபோதும் இந்த நெடுஞ்சாலையில் இதற்கு முன் பல தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக ஜூன் 25ம் தேதி 2016ம் ஆண்டில் கூட, இதே சம்பவ இடத்தில், ஐ.ஆர்.பி.எஃப் படையினரின் வாகத்தை பயங்கரவாதிகள் நிறுத்தி திடீர் தாக்குதல் நடத்தினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் 8 வீரர்கள் மரணமடைந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதே போன்ற மற்றொரு தாக்குதலில் 11 பேர் காயப்பட்டிருப்பதாகவும், 2014ம் ஆண்டு பி.எஸ்.எஃப் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல வீரர்கள் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“கடந்த காலத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணம், பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதியை நெருங்கிய நெடுஞ்சாலையை வீரர்கள் கடந்ததே ஆகும். அதுவே பயங்கரவாதிகளுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டும், இந்த முறையும் அதே பழைய நெடுஞ்சாலை வழியாக இவர்கள் கடந்துள்ளனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Narendra Modi Jammu And Kashmir Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment