/tamil-ie/media/media_files/uploads/2019/02/1_759-2.jpg)
Pulwama attack response
Pulwama attack response : புல்வாமா மாவட்டத்தில் நேற்று துணை ராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அதில் 44 வீரர்கள் மரணமடைந்தனர். நாட்டின் பாதுகாப்பினை கேள்வி கேக்கும் பொருட்டு அமைந்துள்ளது இந்த தக்குதல். இந்த தக்குதலுக்கு உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Pulwama attack response : ராகுல் காந்தி - செய்தியாளர்கள் சந்திப்பு
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தன்னுடைய கடும் கண்டனத்தை அறிவித்திருக்கிறார். மேலும் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ராகுல் காந்தியுடன் இருந்தார். தீவிரவாதத்தின் இலக்கு நாட்டை பிளவுபடுத்துவது தான். ஒரு நொடி கூட நாம் இரண்டாக பிளவுற்று நிற்க மாட்டோம் என்று கூறிய அவர், மத்திய அரசுடனும், வீரர்களுடனும் துணை நிற்போம் என்று அவர் கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், எத்தகைய வெறுப்பும் இந்நாட்டின் மீது நாம் வைத்திருக்கும் அன்பை அசைத்து பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.
இன்று நாம் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றோம். நம் நாடு 40 வீரர்களை இழந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நாம் உறுதுணையாக இருக்கின்றோம் என்பதை எடுத்துக் கூற வேண்டிய நேரம் இது. எத்தகைய பெரும் தாக்குதல் நடைபெற்றாலும் நாம் ஒரே நாடாக தான் இருந்து பதிலடி தருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.