புல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்

சொந்தங்களை இறந்த உறவினர்களுடன் நாம் துணை நிற்க வேண்டிய தருணம் இது

By: Published: February 15, 2019, 3:50:20 PM

Pulwama attack response : புல்வாமா மாவட்டத்தில் நேற்று துணை ராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அதில் 44 வீரர்கள் மரணமடைந்தனர். நாட்டின் பாதுகாப்பினை கேள்வி கேக்கும் பொருட்டு அமைந்துள்ளது இந்த தக்குதல். இந்த தக்குதலுக்கு உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Pulwama attack response : ராகுல் காந்தி – செய்தியாளர்கள் சந்திப்பு

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தன்னுடைய கடும் கண்டனத்தை அறிவித்திருக்கிறார். மேலும் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ராகுல் காந்தியுடன் இருந்தார். தீவிரவாதத்தின் இலக்கு நாட்டை பிளவுபடுத்துவது தான். ஒரு நொடி கூட நாம் இரண்டாக பிளவுற்று நிற்க மாட்டோம் என்று கூறிய அவர், மத்திய அரசுடனும், வீரர்களுடனும் துணை நிற்போம் என்று அவர் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், எத்தகைய வெறுப்பும் இந்நாட்டின் மீது நாம் வைத்திருக்கும் அன்பை அசைத்து பார்க்க முடியாது  என்று அவர் கூறினார்.

இன்று நாம் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றோம். நம் நாடு 40 வீரர்களை இழந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நாம் உறுதுணையாக இருக்கின்றோம் என்பதை எடுத்துக் கூற வேண்டிய நேரம் இது. எத்தகைய பெரும் தாக்குதல் நடைபெற்றாலும் நாம் ஒரே நாடாக தான் இருந்து பதிலடி தருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க : புல்வாமா தாக்குதல் மிகப் பெரிய தவறு… இதற்கான விலையை நிச்சயம் தீவிரவாதிகள் தருவார்கள் – எச்சரித்த மோடி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pulwama attack response we stand with government says rahul gandhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X