புல்வாமா தாக்குதல் : அமெரிக்கா போல் இந்தியா அதிரடியில் இறங்குமா ?

ஆனாலும் ஏனோ இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைய பதட்டமான சூழலே இன்றும் நிலவி வருகிறது.

Pulwama terror attack: Punishing Pakistan
Pulwama terror attack: Punishing Pakistan

Nirupama Subramanian

Pulwama terror attack : Punishing Pakistan :  சாய்சஸ் – இன்சைட் தி மேக்கிங் ஆஃப் இந்தியாஸ் ஃபாரீன் பாலிசி – என்ற புத்தகத்தில் முன்னாள் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் “ 26/11 சம்பவத்திற்கு பின்பு, இந்தியா பாகிஸ்தான் மீது ஏன் போர் தொடுக்கவில்லை என்பதற்கான காரணங்களை எழுதியிருப்பார்.

முதலாவது, இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்று உலக நாடுகள் காத்துக் கொண்டிருந்தன. இரண்டாவது, பெனாசீர் பூட்டோவின் கொலைக்கு பின்பு பாகிஸ்தான் முழுவதும் ஒரு வித கோப அலை பரவி இருந்தது.

இந்தியாவுடனான போர் என்பதில் பாகிஸ்தானுக்கும் பெரிய அளவில் விருப்பமில்லை என்பது உண்மை. பாகிஸ்தானின் ராணுவத்துடன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இந்தியா உலக நாடுகளின் கவனத்தை பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கம் செயல்படும் இடத்திற்கு திருப்பியது.

26/11 தாக்குதலுக்கு முன்பு வரை ஒசாமா பின்லேடனின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்வது அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது.  ஆனால் 2008ம் ஆண்டு இருந்த சூழ்நிலை தற்போது இல்லை. இதே போன்ற பிரச்சனை மறுமுறையும் ஏற்படலாம் என எச்சரிக்கை செய்தே இருந்தார் மேனன்.

தாக்குதலால் எந்த விதமான நேரடி ஆதாயமும் கிடையாது

கடந்தவாரம், காஷ்மீரில் இருந்து ஜம்முவிற்கு வந்து கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. அதில் 40 சி.பி.ஆர்.எஃப் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மும்பை தாக்குதல் நடைபெற்ற போது உருவான தாக்கம் தான் தற்போது மக்கள் மனதில் உருவாகியுள்ளது. ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த சூழ்நிலை தற்போது இல்லை.

பாஜக ஆட்சியில், அதுவும் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கின்ற நிலையில் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்ற எதிர்ப்பார்ர்பு எழுவது கட்டாயமாகிறது. இம்ரான் கான் தலைமையில் அமைந்திருக்கும் அரசு ராணுவமும் – பாகிஸ்தான் அரசும் ஒரே கொள்கைகளை கொண்ட அமைப்புகளாக தங்களை தொடர்ந்து முன்னிறுத்தி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் மக்களின் எண்ணவோட்டத்தையும் இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது.

மேலும் படிக்க : இதுதாங்க இந்தியா… அச்சமுற்று இருந்த காஷ்மீர் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்

இந்தியாவின் சூழலும், பாகிஸ்தானின் சூழலும், ஏன் உலகின் சூழலும் கூட மாறிவிட்டது. இந்த போரினால் இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்தியாவை ஆளும் ஆளுமைகளுக்கு இருக்கின்றதா என்பதில் இன்னும் போதிய தெளிவில்லை. கண்ணுக்கு தெரிகின்ற வகையில் நடத்தப்படும் ராணுவத் தாக்குதல்களை மக்கள் மத்தியில் வெற்றி என்று கூறி அரசியல் ஆதாயம் காண்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இதைத்தான் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு உரியில் நடத்திய தாக்குதலை பயன்படுத்தி அரசு ஆதாயம் தேடிக் கொண்டது. உரி தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச எல்லையைத் தாண்டி இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மோடி ஆட்சிக்கு ப்ரவ்னி பாய்ண்ட்களை தான் அளித்தது. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

அமெரிக்கா போல் இந்தியா அதிரடியில் இறங்க முடியுமா ?

இந்தியாவால் அமெரிக்கா போன்று நேரடியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பஹவல்பூரிலோ, லஸ்கர்-இ-தொய்பா அமைந்திருக்கும் முரித்கேலோயே வான்வெளி தாக்குதலை நடத்த இயலுமா ? ட்ரோன் அட்டாக் மூலமாக தாக்குதல் நடத்தினாலும், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க இது போதாக்குறையான ஒன்றாகவே அமையும். இதனால் பாகிஸ்தான் மண்ணில் அது போன்ற அமைப்பிற்கு ஆதரவு பெருகும். ஆனால் சாதாரண பொதுமக்களும் கொல்லப்படுவார்கள்.

கார்கில் நடைபெற்று கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகின்ற நிலையில், இது போன்ற பல்வேறு சூழ்நிலைகளை இந்தியா சந்தித்துள்ளது. தன்னால் இயன்ற அளவு பாகிஸ்தானின் நடைமுறையில் மாற்றங்களை கொண்டுவர முயன்றது. ஆனால் அவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியாவின் எதிர்வினை

இந்திய நாடாளுமன்றத்தின் மீது ஜெய்ஷ் அமைப்பு தாக்குதல் நடத்திய போது, ஐந்து லட்சம் வீரர்களை மேற்கு எல்லைக்கு அனுப்பியது இந்திய அரசு. 1971ம் ஆண்டிற்கு பிறகு செயல்படுத்தப்பட்ட மிகப் பெரிய முன்னேற்பாடு அதுவாகும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆனால் அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்யிடம் அமெரிக்க அரசு, இந்த தாக்குதலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டது.

ஜனவரி 12,2002 அன்று அன்றைய பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாராப் இந்த தாக்குதலை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று அறிவித்தார். பின்பு பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு முடிவு கட்டுவதாக அறிவித்தார் அவர். ஆனால் பாகிஸ்தானின் ராணுவம் எல்லை மீறிய தாக்குதலை நடத்திக் கொண்டே போனது, மீண்டும் அதே வருடம் மே மாதம், இப்படியான சூழல் மீண்டும் உருவானது. ஃபிதாயீன் அமைப்பு 34 பேர்களை கொன்றுவிட்டது. போர் என்ற சூழல் மீண்டும் உருவாக சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலின் பேரால் மீண்டும் போர் கைவிடப்பட்டது.

2017ம் ஆண்டு வெளியான செய்திப்படி, ஜூலை இறுதி 2002ல் லைன் ஆஃப் கண்ட்ரோலில் இருக்கும் குப்வாரா மீது வான்வெளி தாக்குதலை இந்தியா நடத்தியது. கார்கில் போருக்கு பின்பு இந்தியா நடத்திய முதல் வான்வெளி தாக்குதல் இதுவாகும்.

டிசம்பர் 2001 அன்று, பாகிஸ்தானிற்கான இந்தியா ஹை கமிஷனரான விஜய் நம்பியாரை திரும்ப அழைத்துக் கொண்டது இந்தியா. மேலும் டெல்லியில் இருந்த பாகிஸ்தான் ஹை கமிஷன் அலுவலகத்தில் இருந்து 50% அலுவலர்களை வெளியேற்றியது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை தடை செய்தது. பாகிஸ்தானிலும் இதே நிலை நீடித்தது. மே 2002 அன்று பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் அஷ்ரஃப் ஜெஹாங்கீர் குவாசீயை இந்தியாவில் இருந்து வெளியேற கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்தியாவின் மிகவும் ஆதரவான நாடு என்ற அந்தஸ்த்தை திருப்பிப் பெறலாம் என்று முடிவு அன்று எடுக்கப்பட்டாலும் இன்று அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது இந்தியா.  2004 அன்று வாஜ்பாய்-முஷாராஃப் மாநாடு நடைபெற்றது. பாராளுமன்ற தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட மிகவும் முக்கியம் வாய்ந்த சந்திப்பாக இன்றும் பார்க்கப்படுகிறது.

மீண்டும் 2006ம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா தொடர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு 209 நபர்களை கொன்றது. விளைவு, இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தை தடைபெற்றது.  மறுபடியும் மும்பையில் 2008ம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட அமைதிப் பேச்சுவார்தை மேலும் தடைபட்டது. அதன்பின்பு இருசாரரும் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகள் தோல்வியைத்தான் சந்தித்தது.

இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பேச்சுவார்த்தை வேண்டும் என்றது. ஆனால் பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சனையையும் உள்ளே சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனாலும் ஏனோ இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைய பதட்டமான சூழலே இன்றும் நிலவி வருகிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pulwama terror attack punishing pakistan the options india has

Next Story
இதுதாங்க இந்தியா… பாதுகாப்பின்றி இருக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்!Kashmiris Facing Problems
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com