Pune policeman won Rs 1 5 crore on Dream11: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் காவல் நிலையத்தில் (Pimpri Chinchwad police station) போலீஸ்காரராக பணிபுரிந்தவர் சோம்நாத் ஜெண்டே (Somnath Zende).
இவர், ட்ரீம்லெவன் ஆன்லைன் போர்ட்லில் ஆன்லைன் கேம் விளையாடி ரூ.1.5 கோடி வரை பணம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சோம்நாத் ஜெண்டே மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிம்ப்ரி சின்ச்வாட் போலீஸ் தலைவர், போலீஸ் துணை கமிஷனர் அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜெண்டே ஆன்லைன் கேமிங் தளம் மூலம் லாட்டரியை வென்றார்.பரிசை வென்ற பிறகு, அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதனால், காவல் துறை குறித்து சில எதிர்மறையான எதிர்வினைகள் வந்தன. மேலும், அவர் போலீஸ் சீருடையில் பேட்டி அளித்துள்ளார். இந்த இரண்டு காரணங்களுக்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“