புனேவின் போர்ஷே விபத்தில் சிக்கிய மைனர் குற்றவாளிக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி, “தெருவில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? பெரிய மதுக்கடைகளுக்கு வருபவர்கள் வீட்டுக்கு வாக்கிங் செல்ல மாட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் ஏதாவது மாற்றம் தேவை”, என்றார்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் பணிபுரியும் பொறியாளர்கள் அனீஷ் அவதியா மற்றும் அஷ்வானி கோஷ்தா ஆகியோர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யெர்வாடா பகுதியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற போர்ஷே கார், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் உயிரிழந்தனர்.
தனது மைனர் மகனுக்கு மது அருந்தவும், போதையில் போர்ஷை ஓட்ட அனுமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறார் நீதிச் சட்டம் 75 மற்றும் 77 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவனின் தந்தையை புனே போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அதே குற்றத்தில், இரண்டு பார்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஐவரில், நான்கு பேர் - கோசி உணவகத்தின் உரிமையாளர், நமன் பிரல்ஹாத் பூதாடா (25), மற்றும் அதன் மேலாளர், சச்சின் கட்கர் (35), பிளாக் உணவகத்தின் இரண்டு மேலாளர்கள், சந்தீப் சங்காலே (34) மற்றும் ஜெயேஷ் பொங்கர் - செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், பூடாடா, கட்கர் மற்றும் சங்கலே ஆகியோர் புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 24 வரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். மைனரின் தந்தை மற்றும் பொன்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் நமனின் தந்தை பிரல்ஹாத் பூதாடா (58) மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் விசாரணைக்காக காவல்துறையில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எஸ் பி பொன்க்ஷே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
காவல் துறையினரின் நீதிமன்ற காவல் கோரிக்கைக்கு அனுமதி அளிக்கும் முன், நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம், “தெருவில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? ஏனெனில் பெரிய மதுக்கடைகளுக்கு வருபவர்கள் வீட்டுக்கு வாக்கிங் செல்ல மாட்டார்கள்.
அவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டுவார்கள். இந்த நிலையில் ஏதாவது மாற்றம் தேவை. வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு மதுபானம் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதற்கு ஒரு வரம்பை முடிவு செய்யுங்கள்”, என்று கூறினார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று குற்றவாளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.ஜெயின்,
விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட மைனர் தந்தைக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட சட்ட விதிகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது என்பது பாதுகாப்பு தரப்பின் முக்கிய வாதம். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் பிரிக்கப்பட வேண்டும், என்றார்.
வாதங்களை விசாரித்த நீதிபதி மேலும், “இந்தக் காவலில் வைக்கும் கோரிக்கையை முடிவு செய்யும் போது காரணத்தையும் தர்க்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். குற்றத்தின் தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவர்களை போலீஸ் காவலில் வைப்பதற்கான காரணங்களைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மே 24 வரை காவலில் வைக்கப்படுவது நியாயமானது மற்றும் அவசியமானது”, என்று உத்தரவிட்டார்.
Read in English: Porsche crash: ‘What will people on streets do? Something needs to change in this situation,’ says judge
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.