Advertisment

புதிய வாழ்வு: சூடான வடபாவ், சமோசா தயாரிக்கும் ஆயுள் தண்டனை கைதிகள்; இது எங்கே?

மகாராஷ்டிரா சிறை மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உணவகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Yerawada Open Prison

Inmates of Yerawada Open Prison in the kitchen of the newly launched restaurant. (Express photo by Sushant Kulkarni)

மகாராஷ்டிரா சிறை மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உணவகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் நேற்று (புதன்கிழமை) எரவாடா திறந்தவெளி சிறைச்சாலையில் முதல் உணவகம் திறக்கப்பட்டது.

Advertisment

குடும்ப உறுப்பினரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் 47 வயதான நபர் நேற்று பிஸியாக உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். படாட்டா வடைகளை பொரித்து எடுத்ததும், சமோசா பொரிக்க தயாராக வைக்கும் படி தன் சக ஊழியரிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அவரிடம் பேசுகையில், புதிய வாழ்விற்காக காத்திருந்தேன். அது இப்போது கிடைத்துள்ளது என்றார்.

எரவாடா திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரில் இவரும் ஒருவர். இவர் புனேவில் உள்ள குறைந்தபட்ச பாதுகாப்பு சிறை வசதி கைதிகளால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்ட உணவகத்தை நிர்வகித்து வருகிறார்.

"என் வாழ்க்கையின் இருண்ட காலத்தை என்னால் அழிக்க முடியாது, ஆனால் நான் முன்னேற ஒரு வாய்ப்பு உள்ளது. மற்ற கைதிகளும் இதே நோக்கத்துடன் என்னுடன் உணவகத்தில் பணியாற்றுவது, இந்த நோக்கத்தை அடைய எனக்கு உதவும்" என்று மற்றொரு ஆயுள் தண்டனை கைதி நம்பிக்கை தெரிவித்தார். பக்கத்து வீட்டாரை கொலை செய்த வழக்கில் இவர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இவர் அந்த உணவகத்தில் வடை பாவ்களுக்கு பாவ் ரொட்டிகள் தயார் செய்கிறார்.

சிறைத் துறையின் இந்த உணவகத் திட்டத்திற்கு “ஷ்ருங்காலா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் செயின் அல்லது சீரிஸ் என்பதாகும். இதன் மூலம் சிறைக் கைதிகளால் உணவகங்கள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. எரவாடா திறந்தவெளி சிறைச்சாலைக்கு அருகில் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வணிக மையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. தற்போது இந்த உணவகத்தில் 15 கைதிகள், 7 பேர் சமையலறைப் பணியிலும், 8 பேர் பரிமாறும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வருபவர்கள். வியாபாரம் பெருகுவதால் கைதிகளின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. உணவகத்தில் பணிபுரியும் கைதிகளுக்கு டி-சர்ட் மற்றும் பேன்ட் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சிறை மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உணவகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன நிலையில் முதல் பிரிவு புனேவில் தொடங்கப்பட்டுள்ளது.

உணவகத்தில் தற்போது வட பாவ், மிசல் பாவ், கண்டா பாஜி உள்ளிட்ட மகாராஷ்டிர சிற்றுண்டிகள் மற்றும் சமோசா, புலாவ், அரிசி தட்டு, காய்கறி குழம்பு மற்றும் ரொட்டி, பாவ் பாஜி போன்ற வழக்கமான உணவுகள் உணவகத்திற்கு வருபவர்களுக்கு சூடாக பரிமாறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment