/tamil-ie/media/media_files/uploads/2022/10/Dhaliwal-3col.jpg)
Punjab’s AAP government sought resumption of trade ties with Pakistan
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் அரசு பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரியுள்ளது. இது ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 7, 2019 அன்று இஸ்லாமாபாத்தால் இடைநிறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ஜூலை 14-15 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற மாநில விவசாயம் மற்றும் தோட்டக்கலை அமைச்சர்களின் தேசிய மாநாட்டின் போது, பஞ்சாப் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் இந்த கோரிக்கையை எழுப்பினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/trade-india-pak.jpg)
இந்த மாநாடு - மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டின் அறிக்கை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்து விவசாய உற்பத்தி ஆணையர்கள் (APCs), முதன்மை செயலாளர்கள் மற்றும் விவசாய இயக்குனர்களுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது.
அதில், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானுடனான இருதரப்பு வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை தலிவால் எழுப்பியதாக விவாதங்களின் பதிவுகள் காட்டுகின்றன. பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பஞ்சாப் தவிர, வேறு எந்த மாநிலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பவில்லை என்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
மாநாட்டிற்குப் பிறகு "மாநில அரசுகளுடனான கலந்துரையாடலில்" பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான பஞ்சாப் அரசாங்கத்தின் கோரிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது என்று பதிவுகள் மேலும் காட்டுகின்றன.
இதுத்தவிர எல்லைப் பகுதிகளில் (14,000 ஏக்கர்) விவசாய இடுபொருளுக்கு ஆதரவு வழங்குதல், காய்கறிகளுக்கான குளிர்பதனக் கிடங்குக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு, விளை நிலங்கள் எரிப்பதைத் தடுக்க நிதியுதவி, விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் பல்கலைக்கழக நிதி மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த நிதியுதவி போன்ற தலிவாலின் பிற கோரிக்கைகளும், அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இயல்பான இருதரப்பு வர்த்தகம் இப்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதற்கான இந்தியாவின் முடிவை அடுத்து, பாகிஸ்தான் அதன் "ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளின்" ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 7, 2019 அன்று இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்தியது. இது பின்னர் தனது நிலைப்பாட்டை தளர்த்தி, குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களை வர்த்தகம் செய்ய அனுமதித்தது.
முன்னதாக, புல்வாமாவில் 40 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு நாளுக்குப் பிறகு, பிப்ரவரி 15, 2019 அன்று பாகிஸ்தானுக்கு மிகவும் விருப்பமான நாடு அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றது.
பிப்ரவரி 16, 2019 அன்று பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியையும் 200 சதவீதமாக இந்தியா உயர்த்தியது.
இந்தியா 1996 இல் பாகிஸ்தானுக்கு மிகவும் விருப்பமான நாடு (MFN) அந்தஸ்தை வழங்கியது மற்றும் இஸ்லாமாபாத் நவம்பர் 2, 2011 அன்று புது டெல்லிக்கு அதே அந்தஸ்தை வழங்க முடிவு செய்தது, ஆனால் அந்த முடிவு அமல்படுத்தவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.