Advertisment

விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி; நீதிமன்றம் போட்ட கன்டிசன் என்ன?

Farmers Protest in Punjab and Haryana | 'பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது” என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Punjab and Haryana HC asks states to allow protest in designated areas

இந்த வழக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Farmers Protest in Punjab and Haryana | விவசாயிகளின் போராடடத்தை கருத்தில் கொண்டு ஹரியானாவின் பல்வேறு மாவட்டங்களில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், சில மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு, எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இந்த மனு பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் இன்று (பிப்.13,2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “விவசாயிகள் குறிப்பிட்ட இடங்களில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு” பிறப்பித்தது.

மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினர் அமர்ந்து பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தியது. தொடர்ந்து, இந்த வழக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நீதிமன்றம் தனது உத்தரவில், “பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் விவசாய ஆதரவு போராட்டக்குழுவினருக்கு ஒரு நியமிக்கப்பட்ட பகுதியை அடையாளம் காண வேண்டும்.

தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அனுப்பியது.

ராஜஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு

இதற்கிடையில், விவசாயிகளின் 'டெல்லி சலோ' அணிவகுப்பைக் கருத்தில் கொண்டு, அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுடனான ராஜஸ்தானின் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது

பிகானேர் ரேஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஓம் பிரகாஷ் ரத்தன்புரா எல்லைக்கு சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். காவல்துறை அதிகாரிகளிடம் பேசி தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் மற்றும் அனுப்கர் மாவட்டங்களில் மொபைல் இன்டர்நெட் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

கண்ணீர் புகை குண்டு வீச்சு

இதற்கிடையில், பஞ்சாப்-ஹரியானா (ஷம்பு) எல்லையில் செவ்வாயன்று குழப்பம் ஏற்பட்டது, எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் தடுப்புகளை அகற்றத் தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து ஹரியானா போலீசார் கும்பலைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விவசாயிகள் சங்கங்கள் 'டில்லி சலோ' அணிவகுப்பைத் தொடங்கின.

இதையடுத்து, பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாகனங்கள் ஹரியானா காவல்துறையினரால் எல்லையில் கைப்பற்றப்பட்டன.

ஆங்கிலத்தில் வாசிக்க : Punjab and Haryana HC asks states to allow protest in ‘designated areas’

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Punjab Farmers Protest Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment