நான் எனது மாமா பகவந்த் மானுக்கு வாக்கு கேட்க வந்துள்ளேன் என ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள், தனது தாயுடன் சேர்ந்து’ கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகள் ஹர்ஷிதா (26) ஐஐடி-டெல்லி பட்டதாரி. இப்போது பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், ஹர்ஷிதா தனது தாயுடன் சேர்ந்து’ ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளருக்காக, வார இறுதியில் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள துரியில் பிரச்சாரம் செய்தார்.
டெல்லி முதல்வர் மனைவி சுனிதா கெஜ்ரிவால், “மக்கள் ஏற்கனவே பகவந்த் மானுக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் வேலை செய்ததை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர், அதை இங்கேயும் செய்வார்கள் என கூறினார்.
பஞ்சாப் ஒரு முக்கியமான தேர்தலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், வேட்பாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விடவில்லை. குறிப்பாக களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்’ பெண்களைக் கொண்டு தங்களுக்காக வாக்கு சேகரிப்பது இப்போது அங்கு பிரபலமாகி இருக்கிறது.
படித்த, நகர்ப்புற இளம் பெண்கள் - சில சமயங்களில், மனைவிகள், மருமகள்கள், தாய்மார்கள் மற்றும் வேட்பாளர்களின் சகோதரிகள் - கூட்டத்துடன் வந்து தங்கள் வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கிறார்கள்.
அமிர்தசரஸ் கிழக்குத் தொகுதியில் ஹர்ஷிதா’ மன் சார்பாக பிரச்சாரம் செய்த இடத்திலிருந்து 200 கிமீ தொலைவில், நவ்ஜோத் சிங் சித்துவின் 27 வயது மகள் ரபியா மேடையில் நின்று “எனது தந்தை வெற்றிபெறும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார்.
சித்துவின் மனைவியும், முன்னாள் எம்எல்ஏவுமான நவ்ஜோத் கவுர் சித்து, தொகுதியில் பெரும்பாலும் கணவர் இல்லாத இடத்தை நிரப்பி வரும் நிலையில், முதன்முறையாக ரபியாவும் களத்தில் குதித்துள்ளார்.
"நேர்மை எப்போதும் வெற்றி பெறும், அதனால் என் தந்தை வெற்றி பெறுவார்," என்று அவர் தனது பிரச்சாரங்களின் போது கூறினார்.
ஒரு கட்டத்தில், காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளராக சித்துவை விட சரண்ஜித் சிங் சன்னியைத் தேர்ந்தெடுத்தது குறித்து’ அவர் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார், "ஏழை முதல்வர்" தனது வங்கிக் கணக்கில் 133 கோடி ரூபாய் வைத்திருப்பதைக் கூட கேள்வி எழுப்பினார்.
ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலின் மகள் ஹர்லீனும் அவரது தொகுதியான ஜலாலாபாத்தில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்றுள்ளார். 22 வயதான அவர் வாக்காளர்களை அன்புடன் வரவேற்கிறார், தனது வயதுடைய பெண்களைக் கட்டிப்பிடிப்பதை உறுதிசெய்து, பெண்கள் பாதுகாப்பு பெயரில் வாக்குகளைக் கோருகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங்கின் 14 வயது மகள் ஏகோம், கிதர்பாஹாவில்’ வளர்ச்சியைப் பற்றி பேசி தனது தந்தைக்கு வாக்கு சேகரிக்கிறார். 9 ஆம் வகுப்பு படிக்கும் அவள், “என் அப்பா உங்களுக்காக உழைத்ததாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.” என பேசுகிறார்.
படாலா காங்கிரஸ் வேட்பாளர் அஷ்வினி சேக்ரி மற்றும் சுஜான்பூரில் இருந்து பாஜக வேட்பாளர், தினேஷ் சிங் பாப்பு ஆகிய இருவரின் பிரச்சாரங்களும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்களான, பெண்களால் கையாளப்படுகின்றன.
முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தற்போது அமிர்தசரஸ் வடக்கின் SAD வேட்பாளருமான அனில் ஜோஷியின் மருமகள் ஜப்லீன் கவுர் ஜோஷி, அவருக்காக பிரச்சாரம் செய்ய வீடு வீடாகச் செல்கிறார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜப்லீன்,"நகரத்தைப் பற்றிய அப்பாவின் தொலைநோக்குப் பார்வையைப் பற்றி நான் பேசுகிறேன், இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார், மேலும் அவர் எப்படி வேலைவாய்ப்பை அவர்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு வருவார்"என்பதை பற்றி கூறி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிக்க
Exclusive: காங்கிரஸ் முன்வைக்கும் மாற்றுக்கு ஆதரவாக தேசிய மனநிலை இல்லை – அஸ்வினி குமார் பேட்டி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“