Manraj Grewal Sharma :
Amarinder Singh interview : பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமரீந்தர் சிங் ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழுக்கு சிறப்ப்பு பேட்டி அளித்துள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும், மக்களின் நிலைபாடு குறித்து பல கேள்விகளுக்கு அமரீந்தர் சிங் பதில் அளித்துள்ளார்.
இந்த சிறப்பு பேட்டியில் அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு!
1. கடந்த தேர்தலை விட இந்த முறை தேர்தலில் கண்டுள்ள மிகப் பெரிய மாற்றம் என்றால் அது சமூகவலைத்தளங்கள் தான். கூடவே டிவி சேன்ல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. எல்லாவற்றிலும் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களும் நொடிக்கு நொடிக்கு ஒளிப்பரப்படுகின்றன. இதனால் மக்களும் எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்கிறார்கள்.
2. பஞ்சாபில் காங்கிரஸ் கை ஓங்குவது உறுதி.பாஞ்சாபில் அதிகமான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
3. பஞ்சாபில் பர்காரி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் நினைவாக முதலில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் நினைவு மண்டபத்திற்கு செல்வாகும் பணத்தை வைத்து அவர்கள் பெயரிலேயே இலவச பள்ளிகள் அல்லது இலவச மருத்துவமனை கட்டலாம் என தீர்மானித்துள்ளோம். இன்றைய சூழலில் நாட்டில் வளர்ச்சிகு தேவை நினைவு மண்டபமா? அல்லது மருத்துவமனையா?
4. காங்கிரஸின் வெற்றி நாடு முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஒரு சாதாரண மனிதரை அழைத்து பேசினால் கூட உங்களுக்கு தெரியும். எல்லோரும் காங்கிரஸ் ஆட்சியை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
5. பிரதமர் நரேந்திர மோடி பாலகோட் தாக்குதலை தனது தனிப்பட்ட வெற்றி என கூறி பெருமை பேசுகிறார். 1947 ஆம் ஆண்டு முதல் மோடிக்கு முன்பு வரை பிரதமர் பதவியில் பதவி வகித்த எந்த ஒரு தலைவரும் ராணுவ வெற்றியை தங்களது வெற்றி என்று பெருமை பாராட்டியதில்லை. 1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போரின் வெற்றிக்கு பிரதமர் இந்திரா காந்தி ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷாவுக்கு ராணுவ பிரிவை கைக்காட்டி அவர்களின் வெற்றியை நாடு முழுவதும் பரப்பி அவர்களுக்கு பெருமையை பரிசளித்தார்.
அவருக்கு பிறகு வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற போது கார்கில் போர் நடைப்பெற்றது. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு ராணுவ தலைவர் ஜெனரல் வி. பி. மாலிக் மற்றும் அவரது குழுவினர் தான் காரணம் என்று வாஜ்பாய் அறிவித்தார்.
ஆனால் மோடி பாலகோட் தாக்குதலை தனது சொந்த வெற்றி போல் பரப்பி பேசி வருகிறார். முதலில் பால்கோட் தாக்குதல் குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளன. எனக்கு இருக்கும் சந்தேகத்தை போலவே மக்கள் மனதில் பலநூறு கேள்விகள் உள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் எத்தனையோ கேமராக்கள், புகைப்படங்களை எடுப்பது என ஏகப்பட்ட வசதிகள் வந்துவிட்டன. அப்படி இருக்கையில் பாலகோட் தாக்குதல் குறித்து ஒரு ஆதாரத்தை கூட இதுவரை யாரும் வெளியிடவில்லையே ஏன்?
6. நேரம் வந்துவிட்டது. புதிய அரசாங்கத்திற்கும் புதிய பிரதமரையும் மக்கள் வரவேற்க தயாராகிவிட்டனர். கூடிய விரைவில் அந்த மாற்றத்தை அனைவரும் காணலாம்.
7. பிரியங்கா காந்திக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பு தனித்துவமானது. ராகுல் காந்தி ஒருபுறம் தனது பணியை சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து பிரியங்கா காந்தியின் பங்களிப்பும் இந்த தேர்தலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
8. எதிர்கட்சியை சேர்ந்த சுனில் ஜகாரை அடுத்த பஞ்சாப் முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறேன் என்று நான் கூறியது உண்மை தான். சுனிலை எனக்கு நீண்ட ஆண்டுகளாக தெரியும். சிறந்த மனிதர். புத்திசாலி, முற்போக்கு சிந்தனையாளர். மக்கள் நலனை அதிகம் விரும்புவர். இப்படிப்பட்டவர் வருங்காலத்தில் பஞ்சாப் முதல்வராக வருவதில் எனக்கு சந்தோஷம் தான். நான் அவரைத்தான் மட்டும் தான் குறிப்பிட்டேனே தவிர அவரின் அரசாங்கத்தை அல்ல.
9. இம்முறை பஞ்சாப்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் சித்துவுக்கு மக்களிடையே அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 17 ஆம் தேதி இறுதி பிரச்சாரத்திற்கு நாங்கள் ஒன்றாக சென்றிருந்த போது இதை நான் கண்கூடாக பார்த்தேன்.
10. இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. சில பெற்றொர்கள் நன்கு படித்த தங்களது பிள்ளைகளை வெளியூருக்கு வேலை செய்ய அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் நாட்டிற்கு ஏற்படும் இழப்பு ஏராளம். அதனால் தான் பஞ்சாபில் நாங்கள் தொழில் முனைவோருக்கு அதிக வசதிகள் செய்து தருகிறோம்.
11. எனக்குய் பிரதமர் கனவு எப்போதுமே இல்லை. என்னுடைய லட்சியம் பஞ்சாப் மாநிலைத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வது மட்டுமே.