Ritu Sarin
பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இங்கே:
வேளாண் சட்டங்கள் மீதான முட்டுக்கட்டை எவ்வாறு முடிவடையும்?
எந்தவொரு யுத்தமும் முடிவுக்கு வந்தாக வேண்டும். இரண்டாம் உலகப் போராக இருந்தாலும் சரி, விவசாயிகளுடன் நடக்கும் போராக இருந்தாலும் சரி அனைத்திற்கும் முடிவு உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தான் முடிவு கிடைக்கும். வேறு வழியில்லை.
பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் இருப்பதை விவசாய சங்க பிரதிநிதிகள் விரும்பவில்லை. எனவே, நாங்கள் விலகி இருக்கிறோம். பேச்சுவார்த்தை குறித்து இதுவரை நான் யாரையும் (பிரதமர்,உள்துறை அமைச்சர்) சந்திக்கவில்லை.
ஆனால் நான் புரிந்துகொள்வது என்னவென்றால், பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள 32 விவசாய சங்கத்தினரில், சில பிரதிநிதிகள் வேளாண் சட்டங்களை ஒன்றரை வருட காலத்திற்கு ஒத்தி வைப்பது என்ற மத்திய அரசின் முடிவில் உடன்படுகின்றன. இது 24 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம்.
மேலும் சில விவசாய அமைப்புகள், இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை தாண்டி, மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள சில அம்சங்களை திரும்ப பெறுவதை பரிசீலித்து வருவதாக நான் நினைக்கிறேன். எனவே, மீண்டும் நாம் பேச்சுவார்த்தை தளத்திற்கு செல்வது தான் நல்லது.
விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஊடுருவல்கள் குறித்து?
பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்தால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காஷ்மீர் ஊடுறுவல் போன்று, பஞ்சாப் மாநிலத்தின் அமைதியற்ற நிலையை பாகிஸ்தான் ராணுவம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பில் ஆபத்து அதிகம் உள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியதிலிருந்து, குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்குள் ஏராளமான ஆயுதப்பொருட்கள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. போராட்டக்கார்களின் கோபம் , கிளர்ச்சியை பஞ்சாபில் செயல்பட்டு வரும் சில ரகிசய குழுக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் எத்தனை பேர் போராட்டக் களத்தில் உள்ளனர் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்? நிச்சயமாக, சிலர் இருக்க வாய்ப்புள்ளது. போராட்டத் தளம் பல்வேறு தீய நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கான ஆட்சேர்ப்பு முகாமாக கூட இருக்கலாம். பஞ்சாபில் பதற்றமான சூழல்களை உருவாக்குவதே இதன் பொருள்.
செங்கோட்டை வன்முறை குறித்து?
செங்கோட்டை வன்முறை சம்பவத்தை முதலில் எதிர்த்தவன் நான். இந்த வன்முறை சம்பவத்தால் வெட்கி தலை குணிந்து நிற்கிறேன் என்ற எனது சுட்டுரையில் (டுவிட்டா்) பதிவு செய்தேன். ஆனால், அதை ஊதி பெருதாக்குவது நல்லதல்ல. டெல்லி வன்முறை சம்பவத்திற்கு முழு நாடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டது. பிரச்சனையின் அடிப்படை சொல்லாடலை மாற்றுவதன் மூலம் நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்? ஏன், தேவையற்ற, குழப்பாமான ஒரு இரைச்சலை உருவாக்க வேண்டும்?
இப்போது, ஸ்வீடிஷ் பெண் (கிரெட்டா துன்பெர்க்) கருத்தை பதிவிட்ட காரணத்தினால், அவரை குறி வைக்க விரும்புகிறீர்கள். இதன் அடிப்படை தர்க்கம் என்ன?
டெல்லி காவல்துறையினர், திஷா ரவி உள்ளிட்ட ஆர்வலர்களை பெயரிட்டு வருகின்றனர்.
இதனால், என்ன நன்மை?.... அபத்தமான விஷயங்கள்.
பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்திற்கு 18 வயது சிறுமியின் நேரடி பங்களிப்பு ஏதேனும் உள்ளதா? விவாசயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள், ஏன் விசாரிக்கப்படவில்லை. திஷா ரவி கைது செய்யப்பட்டு ஏன் டெல்லிக்கு அழைத்து வரவைக்கப்பட்டார்? இதில், எந்த அர்த்தமும் இருப்பதாய் தெரியவில்லை. ஒட்டுமொத்த விவகாரமும் தவறாக கையாளப்படுவதாக கருதுகிறேன். எவ்வாறு விவசாயம் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் விவசாயிகள் ஸ்வீடன் விவசாயிகளுக்கு கற்பிக்க முடியும். ஆர்தியா அமைப்பை எவ்வாறு இயக்குவது என்று கிரெட்டா சொல்லப்போகிறாரா?
ஆர்வலர்கள் மீதான நடவடிக்கையை எவ்வாறு விவரிப்பீர்கள்?
101 சதவீத தேவையற்ற எதிர்வினை. இந்தியா மீதான உலகத்தின் பார்வையைப் பற்றி சிந்தித்து பாருங்கள். கிரெட்டா துன்பர்க் யார் என்று நீங்கள் பஞ்சாபி விவசாயிகளிடம் கேட்கிறீர்கள். அவர்கள் அந்த சிறுமையைப் பற்றி ஒருபோதும் அறிந்ததில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.