பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் (ஆம் ஆத்மி) இணைந்து செயல்பட விருப்பம் இல்லை என்பதை மாநில காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், மாநிலப் பிரிவில் உள்ள சில தலைவர்கள், தேசிய அளவில் பாஜகவை தோற்கடிப்பதுதான் முக்கியம் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பஜ்வா, “பஞ்சாப் முதல் அமைச்சர் பகவந்த் மானை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசியதுடன், பஞ்சாப்பில் கரையான்களின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்” என்றார்.
மேலும் இதனை காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி. வி ஸ்ரீனிவாஸிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டணிக்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிப்பது இது இரண்டாவது முறையாகும்.
ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி உருவானதும் இது தொடர்பான தனது அதிருப்தியை காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் அவர் வலியுறுத்தினார்.
பாஜ்வாவின் கருத்துகளை காங்கிரஸ் நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். மத்திய பாஜக எதிர்க்க ஆம் ஆத்மி உடன் கூட்டணி சேர்வது பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், கூட்டணி ஏற்பட்டால் வாக்குகளை ஒருவருக்கொருவர் மாற்றுவது கடினம். ஆம் ஆத்மி கட்சியின் ஒரு பகுதியினர் காங்கிரஸில் இருந்து சென்றவர்கள்.
காங்கிரஸ் தனது வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது. ஒருவேளை கூட்டணி ஏற்பட்டால் அது பொருத்தமாக இருக்காது” என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ போலாத், “பஞ்சாப்பில் பாஜக வலுவாக இல்லை. இங்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையேதான் போட்டி.
ஆகவே ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி இங்கு தேவையில்லை” என்றார். தொடர்ந்து, “ஆம் ஆத்மி கட்சியுடன் சமரசம் செய்து கொள்வது கட்சி தொண்டர்களுக்கு எதிரானது" என்றார்.
முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் நெருங்கிய நம்பிக்கையாளர்களில் ஒருவரான முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிந்தர் சிங், “எங்கள் தலைவர்களுக்கு எதிரான பழிவாங்கலைக் கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்தால் எங்களால் தொண்டர்களை திரட்ட முடியாது” என்றார்.
எனினும், “இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறலாம் என்பது சித்துவின் கருத்து” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, தற்போதைய சூழலில் ஆளும் ஆம் ஆத்மி மீது அதிருப்தி நிலவுகிறது. இதனால் தனித்துப் போட்டியிட்டாலே 7 முதல் 8 இடங்களில் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது என்றார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரோ பஞ்சாப்பில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி தேவையில்லை. முதல்வர் பகவந்த் மான் காங்கிரஸ் நிர்வாகிகளை தொண்டர்களை அசிங்கமாக பேசிவருகிறார் என்றார்.
ஆனால் இந்த கூட்டணி காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என மற்றவர்கள் கருதுகின்றனர். ஆம் ஆத்மி கட்சியினர் காங்கிரஸ் தளத்தில் இருந்து வந்ததால், அது காங்கிரஸுக்கு வேலை செய்யும் என்று ஒரு தலைவர் கூறினார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ, “விருப்பமில்லாத திருமணம் இரு வீட்டாரும் பிரச்னையை வலியை கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.