Punjab, exits give fuel to G-23 : பஞ்சாபில் தற்போது நிலவும் நெருக்கடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சமீபமாக கட்சியை விட்டு நீங்கியது போன்றவை ஜி23 தலைவர்களை (காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய குழு) மீண்டும் இது தொடர்பாக கவனம் செலுத்துமாறு கருத்து தெரிவிக்க தூண்டியது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் தலைவர்கள் விலகுகிறார்கள் என்று கட்சி தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் வியாழக்கிழமை அன்று கருத்து தெரிவித்தார். தற்போதைய சூழலில் எங்கள் கட்சியில் எந்த தலைவரும் இல்லை எனவே இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று கூறினார் அவர்.
காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் தேவை என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய தலைவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள குலாம் நபி ஆசாத் சோனியாவுக்கு கடிதம் எழுதிய பிறகு இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கட்சி தலைமைக்கான தேர்தல் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆமாம் சாமி என்று சொல்பவர்களாக இல்லாத போதிலும் ஜி23 தலைவர்கள் கட்சியுடன் தான் இருக்கின்றோம். ஆனால் காந்தி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக கருதப்பட்ட பலரும் அவர்களை விட்டு விலகிவிட்டனர் என்று சிபல் சுட்டிக்காட்டினார். புதன்கிழமை அன்று ஆசாத்தின் வீட்டில் ஜி23 தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, சமீபத்திய சூழல் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதும் முடிவை எடுத்துள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அன்று மாலை சிபல் வீட்டின் வெளியே திரண்ட காங்கிரஸ் கட்சியினர், கடாரோன், பார்ட்டி சோரோ (துரோகிகளே கட்சியை விட்டு வெளியேறுங்கள்) என்று கோஷம் எழுப்பினார்கள்.
டெல்லி காங்கிரஸ் தலைமை அனில் சௌத்ரி, சிபலின் பழைய தொகுதியான சாந்தினி சௌக்கில் இருந்து வந்த தொண்டர்களின் இந்த போராட்டத்திற்கு கண்டனங்களை தெரிவித்த அவர் சிபலின் கருத்துகளை தான் ஏற்கவில்லை என்று கூறினார். அஜய் மகேன் உள்ளிட்ட தலைவர்கள் சிபலின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய சிபல் மிகவும் கனத்த மனதுடன் இருக்கிறேன். என்னுடைய கட்சியை என்னால் இது போன்ற சூழலில் இன்று காண என்னால் இயலவில்லை. இது மனதை உடைக்கும் விதமாக இருக்கிறது. பஞ்சாபில் நடக்கும் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ. அமைப்புகளுக்கு ஆதரவாக முடியும் என்று கூறிய அவர் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியானது ஜி23 தலைவர்களால் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கோவாவில் லூய்சின்ஹோ ஃபலேரோ, அசாமில் சுஷ்மிதா தேவ், மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதியா சிந்தியா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் லலிதேஷ் திரிபாதி ஆகியோரின் வெளியேற்றம் குறித்து காந்தி குடும்பத்தினரின் பெயர்களை தெரிவிக்காமல் கருத்து தெரிவித்தார். அவர்களின் சிறந்த ஆளுமைகளாக கருதப்பட்ட பலரும் கட்சியில் இருந்து விலகியது முரணானது. ஆனால் சிறப்பானவர்களாக கருதப்படாத பலரும் இன்னும் காந்தி குடும்பத்தினருடன் துணை நிற்கிறார்கள் என்றூ கூறினார். நாங்கள் எங்களின் கருத்துகள் முன்வைத்து தொடர்ந்து செயல்படுவோம். எங்களின் கோரிக்கைகளை நாங்கள் மீண்டும் முன்வைப்போம் என்று கூறினார் சிபல்.
ஆசாத் தனது கடிதத்தில் எழுதியதை மீண்டும் வலியுறுத்திய சிபல், காங்கிரஸ் தலைவர் அலுவலகம், சிடபிள்யூசி மற்றும் மத்திய தேர்தல் கமிட்டி தேர்தலுக்கான முடிவுகளுக்காக கட்சி காத்திருக்கிறது என்றார். இதற்கு ஒரு நாள் முன்பு மணீஷ் திவாரி, முன்னாள் ஜே.என்.யூ மாணவர் கன்ஹையா குமார் காங்கிரஸில் சேர்ந்தது குறித்து தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்தார்.
சரியான தீர்ப்பின் மீது ஏகபோக உரிமை யாருக்கும் இல்லை என்று மகாத்மா காந்தி கூறியதை மேற்கோள்காட்டி, மத்தியில் அமைந்திருக்கும் 20 நபர்களால் ஜனநாயகத்தை உருவாக்கிவிட இயலாது. கட்சி தலைமை எங்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட எங்கள் பார்வை குறித்து கேளுங்கள். எங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். எந்த நாட்டின் அதிகார அமைப்புகளிலும் அல்லது எந்தவொரு அதிகார அமைப்புகளிலும் ஏகபோகங்கள் உருவாக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டார்.
பேசுவதற்கான உடனடி காரணங்கள் ஏதும் இல்லை. நீண்ட காலமாக காத்திருக்கின்றோம். ஆனாலும் அதற்கும் ஒரு அளாவு இருக்கிறது. காங்கிரஸுடன் துணை நிற்கும் நபர்களில் நாங்களும் இருக்கின்றோம். நாங்கள் எப்போதும் இருப்போம். நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அறிக்கை வெளியிடவில்லை. இன்றும் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அறிக்கை வெளியிடவில்லை என்று கூறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்கள் மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், குடியரசைக் காப்பாற்றக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்றும், நாட்டிற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை என்றும் அவர் கூறினார்.
பஞ்சாபில் சமீபத்திய மாற்றங்கள் தொடர்பாக முடிவு எடுத்த முக்கிய முடிவுகளில் உடன் இருந்த மகேன், பி.டி.ஐயிடம் பேசிய போது, சிபல் போன்ற தலைவர்கள் கட்சி உறுப்பினர்களை மனச்சோர்வடையச் செய்வதாகவும், அவர்களுக்கு அரசியல் அடையாளத்தைக் கொடுத்த அமைப்பை இழிவுபடுத்தக்கூடாது என்றும் கூறினார். காங்கிரஸிற்கு தலைவர் இல்லை என்று சிபல் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த அவர், காந்தி தொடர்ந்து கட்சியை வழிநடத்துகிறார் என்று கூறினார். CWC மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர்களின் சந்திப்புகள் கடந்த சில மாதங்களில் குறைந்தது அரை டஜன் முறை நடத்தப்பட்டுள்ளன. அங்கு எங்களின் கருத்துகளை தெரிவிக்க முழு வாய்ப்புகளும் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இந்த போராட்டம் நியாயமானது அல்ல. நான் போராட்டத்தை கண்டிக்கிறேன். ஆனாலும் கட்சி தலைவராக, கட்சியைக் குறித்த சிபலின் கருத்து சரியானது இல்லை என்று கூற விரும்புகிறேன் என்று சிபல் வீட்டுக்கு வெளியே கூச்சலிட்ட விவகாரம் குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் சௌத்ரி கூறினார்.
ஜி ஹொஜூர் என்று குறிப்பிட்டு, உங்களை எப்போதும் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று, கட்சி நல்ல நிலைமையில் இருக்கும் போது அமைச்சராக்கி, எதிர்க்கட்சியாக இருக்கும் போது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு அனுப்பி பொறுப்புகளை வழங்கிய கட்சி தலைவரும் கட்சி தலைமையும் ஒன்று தான் என்று சிபல் பெயரை குறிப்பிடாமல் இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஸ்ரீநிவாஸ் பி.வி. ட்வீட் வெளியிட்டார்.
With inputs from Ashtha Saxena
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.