அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு : கேப்டன் அமரீந்தர் சிங் பேசியது என்ன?

Nationa News Update : சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

Captain Amrinder Singh Meet Amit shah : காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் பஞ்சாப் மாநிலத்தில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு உட்கட்சி பூசலே காரணம் என்று தகவல் வெளியாகியள்ள நிலையில்,  பஞ்சாப்பில் விரைவில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த உட்கட்சி பூசல் அக்கட்சிக்கு பெரும் பின்னடையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங் கடந்த இரு தினங்களாக டெல்லியில் முகமிட்டிருந்த நிலையில், அவர் உள்துறை அமைச்சர்அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டில் அவரை நேரில் சந்தித்த கேப்டன் அமரீந்தர் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்துள்ளது.

தற்போது இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பஞ்சாப் முதல்வர் உள்துறை அமைச்சருடன் நடத்தியஇந்த சந்திப்பில், வேளான் சட்டம் பற்றிய விவசாயிகள் போராட்டம் குறித்து விவரிக்கப்பட்டது. வோளான் சட்டங்களை ரத்து செய்து விவசாயிகளின் நெருக்கடியை தீர்க்குமாறு வலியுறுத்தியதாகவும்,  பயிர் பல்வகைப்படுத்தலில் பஞ்சாப் மாநிலத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இவர் பதவி விலகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது  நவ்ஜோத் சிங் சித்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் விலகிய மறுநாளே அமரீந்தர் சிங் அமித்ஷாவை சந்தித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பதவியேற்ற முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இந்த மோதல் குறித்து குர்றுகையில்,”ஈகோ சண்டை” அல்ல என்றும், சித்துவை கட்சியுடன் விவாதிக்க அழைக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும் சித்து ஆட்சியை கவிழ்க்க முயறசிக்கவில்லை என்றும், அவர் ராஜினாமா செய்ததிலிருந்து அவருடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சித்து, தனது  ட்விட்டர் பதிவில் வெளியிட்ட வீடியோவில், மாநிலத்தில் பிரச்சனைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் “சமரசம்” செய்யப்படுவதை தான் பார்த்ததாக கூறினார். மேலும் தனக்கு “தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்” இல்லை என்பதை தெளிவுபடுத்திய அவர் “எனது 17 வருட அரசியல் வாழ்க்கையில்  ஒரு நோக்கத்திற்காகவும், மாற்றத்தை ஏற்படுத்தவும், ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் மற்றும் மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றவும்” பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Punjab former cm amarinder singh meets home minister amit shah

Next Story
2,990 கிலோ ஹெராயின் பறிமுதல்: ‘அதானி துறைமுகம் பலனடைந்ததா?’ விசாரணைக்கு கோர்ட் உத்தரவுMundra Adani port, Mundra Adani port gain, NDPS court orders probe into 2990 kg heroin seizure, 2990 கிலோ ஹெராயின் பறிமுதல், அதானி துறைமுகம் பலனடைந்ததா, விசாரணைக்கு கோர்ட் உத்தரவு, Gujarat, DRI, NDPS, Mundra Adani Port
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X