Advertisment

பஞ்சாபில் தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர் கனடாவில் சுட்டுக் கொலை

துனேகே வேலை செய்ததாகக் கூறப்படும் பாம்பிஹா கும்பலுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் கும்பல்களுடன் போட்டி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
Sukhdool Singh Gill alias Sukha Duneke.jpg

Gangster wanted in Punjab shot dead in Canada’s Winnipeg

பாம்பிஹா கும்பலின் கூட்டாளி என்று கூறப்படும் சுக்தூல் சிங் கில் என்ற சுகா துனேகே, கனடாவின் வின்னிபெக்கில் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

பஞ்சாபில் மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் துனேகே தேடப்பட்டு வந்தான்.

பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, 2017 இல் கனடாவுக்கு தப்பிச் சென்ற துனேக், மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்தான். பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக என்... செவ்வாய்க்கிழமை வெளியிட்ட நாற்பது நபர்களின் பட்டியலிலும் அவனது பெயர் இடம்பெற்றுள்ளது.

துனேகே வேலை செய்ததாகக் கூறப்படும் பாம்பிஹா கும்பலுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் கும்பல்களுடன் போட்டி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

மார்ச் 2022 இல் பஞ்சாபின் மல்லியன் கிராமத்தில் நடந்த கபடிப் போட்டியின் போது, கபடி வீரர் சந்தீப் நாகல் அம்பியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் துனேகேவும் ஒரு குற்றவாளி. அமிர்தசரஸில் உள்ள உறவினர் வீட்டில் கொலையாளிகளுக்கு, மறைவிடத்தை அவன் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் துனேகே, பாஸ்போர்ட் பெற உதவியதாக, பஞ்சாப் காவல்துறையின் குண்டர் தடுப்பு அதிரடிப் படையின் (AGTF) உத்தரவின் பேரில் இரண்டு பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் மீது எஃப்..ஆர். பதிவு செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், துனேகே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது, ​​அவது போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை மற்றும் குற்றவியல் வரலாற்றை சமர்ப்பித்த இரண்டு போலீசார் தங்கள் கடமையில் அலட்சியமாக இருந்ததாகவும், அவன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தெரிவிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது.

அந்த நேரத்தில் அவன் மீது ஏழு கிரிமினல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், காவல்துறை ஐந்து வழக்குகளை மட்டுமே குறிப்பிட்டது, மேலும் அவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இரண்டு வழக்குகளை தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.

FIR இன் விவரங்களின்படி, மோகா காவல்துறைக்கு ஜூன் 11, 2022 அன்று குண்டர் தடுப்பு பணிக்குழு எழுதிய கடிதத்தில், நம்பகமான உள்ளீட்டின்படி, பாஸ்போர்ட் வழங்குவதற்கான போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையில் சுக்தூர் சிங் கில்லின் குற்ற வரலாற்றைப் புகாரளிப்பதில் காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக சுக்தூர் சிங் கில் இந்திய பாஸ்போர்ட்டைப் பெற முடிந்தது.

சுக்தூர் சிங் கில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்என்று கூறியது.

Read in English: Gangster wanted in Punjab shot dead in Canada’s Winnipeg

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Canada
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment