குஜராத்திலிருந்து கூடுதல் 20 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனைப் பெரும் பஞ்சாப்

Punjab gets medical oxygen from Gujarat பஞ்சாபில் ஆக்ஸிஜனுக்கான தேவை கடந்த திங்கள்கிழமை வரை பதினைந்து நாட்களில் 152 மெட்ரிக் டன் முதல் 304 மெட்ரிக் டன் வரை இரட்டிப்பாகியது.

Punjab gets medical oxygen from Gujarat covid second wave Tamil News
Punjab gets medical oxygen from Gujarat covid second wave Tamil News

Punjab gets medical oxygen from Gujarat covid second wave Tamil News : குஜராத்திலிருந்து பஞ்சாபிற்கு 20 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை கொடுக்க மத்திய அரசு கூடுதல் ஒதுக்கீடு செய்துள்ளது. லாஜிஸ்டிக்ஸ் தடைகள் காரணமாக அருகிலுள்ள பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு மீண்டும் வலியுறுத்தி வருகிறது. குஜராத்தின் ஹசிராவிலிருந்து ஒரு டேங்கரில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) நிரப்பப்பட்ட பின்னர், சாலை வழியைக் கொண்டு பஞ்சாபை அடைய சுமார் இரண்டரை நாட்கள் ஆகும்.

“குஜராத்திலிருந்து தினசரி 20 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டைப் பெற, எங்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்து டேங்கர்கள் தேவை. ஏனெனில் ஒரு டேங்கர், 20 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பை கொண்டு பஞ்சாபை இரண்டரை நாட்களில் வந்தடையும். ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் டேங்கர் நிரப்பப்படுவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, ஒரு டேங்கர் ஐந்து நாட்களில் 20 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கொண்டு பஞ்சாப் வந்தடையும். குஜராத்திலிருந்து 20 மெட்ரிக் டன் பெற எங்களுக்கு ஐந்து டேங்கர்கள் தேவை. ஆனால், எங்களுக்கு இரண்டு டேங்கர்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது, இரண்டு நாட்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை எங்களால் பெற முடியும். மேலும், மூன்று நாட்களுக்கு எங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற முடியாது. டேங்கர்கள் குறைவாக இருப்பதால் தொலைதூர இடங்களிலிருந்து எங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற முடியாததற்கு இதுதான் காரணம்” என்று ஆக்ஸிஜன் விநியோகத்திற்கான பஞ்சாப் கோவிட் கண்ட்ரோல் ரூம் இன்சார்ஜ் ராகுல் திவாரி கூறினார்.

தற்போது கூடுதல் ஒதுக்கீடு, பஞ்சாபின் உயிர் காக்கும் வாயுவின் மொத்த ஒதுக்கீட்டை 227 மெட்ரிட்டிலிருந்து 247 மெட்ரிக் ஆக உயர்த்தியுள்ளது.

கடந்த திங்களன்று, “கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், பஞ்சாப் மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலும், பின்வரும் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்ய முன்மொழியப்பட்டுள்ளன. கூடுதல் உற்பத்தி மற்றும் பங்குகளுக்கு எதிராக ஐனாக்ஸ், ஹசிராவிலிருந்து 20 மெட்ரிக் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று பஞ்சாப் அரசாங்கத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கடிதம் குறிப்பிடுகிறது. ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கையாளும் அதிகாரம் பெற்ற குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு கூடுதல் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது.

மே 10 அன்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், மாநிலங்களுக்கு 12 ஐஎஸ்ஓ கன்டெய்னர்கள் / டேங்கர்களை (எல்என்ஜி) மேப்பிங் செய்வதில் பஞ்சாபிற்கு தலா 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு டேங்கர்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இந்த இரண்டு கன்டெயினர்களும் மே 13 அன்று பஞ்சாபிற்கு வர திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் ஆக்ஸிஜன் விநியோகத்தை உயர்த்துவதற்காகக் கடந்த செவ்வாயன்று ஹசிராவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டன.

பஞ்சாபில் ஆக்ஸிஜனுக்கான தேவை கடந்த திங்கள்கிழமை வரை பதினைந்து நாட்களில் 152 மெட்ரிக் டன் முதல் 304 மெட்ரிக் டன் வரை இரட்டிப்பாகியது.

குஜராத்திலிருந்து 20 மெட்ரிக் கோட்டாவைத் தவிர, ஜார்கண்டின் பொகாரோவில் உள்ள மூன்று ஆலைகளிலிருந்து 90 மெட்ரிக், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலையிலிருந்து 60 மெட்ரிக், உத்தரகண்ட் மாநிலத்தில் இரண்டு ஆலைகளிலிருந்து 25 மெட்ரிக் மற்றும் ஹரியானாவில் உள்ள ஒரு ஆலையிலிருந்து 20 மெட்ரிக் டன் ஒதுக்கீடு பஞ்சாப் செய்துள்ளது. மாநிலத்திற்குள் உள்ள தொழில்துறை பிரிவுகளிலிருந்து மருத்துவ ஆக்ஸிஜனுக்காக கூடுதலாக 32 மெட்ரிக் டன் திருப்பி விடப்படுகிறது. பஞ்சாபில் தற்போது திரவ மருத்துவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்காக சுமார் இரண்டு டஜன் பெரிய கிரையோஜெனிக் டேங்கர்கள் உள்ளன.

அதிகபட்ச ஒதுக்கீடு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து போகாரோவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட டேங்கர்களை ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’-ல் சேர்க்கவில்லை. ஏனெனில், இவற்றில் பெரும்பாலானவை அதிகபட்ச உயர உச்சவரம்பான 3.5 மீட்டரை பூர்த்தி செய்யவில்லை. எனவே, தேவைப்படும் எரிவாயுவைப் பெறுவதற்கான சாலை பாதை, ரயில் வழியாகக் கொண்டு செல்லப்பட்டால் 30 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது நான்கு நாட்கள் ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Punjab gets medical oxygen from gujarat covid second wave tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com