Advertisment

அரசுப் பள்ளியில் இப்படியும் ஒரு ஆசிரியரா? தனி நபரின் முயற்சியால் வியந்த கல்வித்துறை

கணிதம் என்றாலே மிகவும் தொய்வான அதே சமயம் மிகவும் குழப்பான ஒன்று என்ற எண்ணத்தை மாற்றியிருக்கிறது இந்த ராமானுஜம் தேர்வுகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Punjab Government School Teacher’s ‘Ramanujan’ test

Punjab Government School Teacher’s ‘Ramanujan’ test

 Raakhi Jagga 

Advertisment

Punjab Government School Teacher’s ‘Ramanujan’ test : பஞ்சாப் மாநிலத்தின் சங்க்ரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பெனெரா என்ற கிராமம். அந்த கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு கணிதத்தின் மீதான ஈடுபாட்டினை தூண்டுவதற்காக வெகுகாலமாக உழைத்து வருகிறார் தேவி த்யால் என்ற ஆசிரியர். 2013ம் ஆண்டு, டிசம்பர் 22ம் தேதி கணித அறிஞர் எஸ். ராமானுஜன் அவர்களின் பிறந்த தினத்தை ஒட்டி 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு ஒன்றை ஏற்பாடு செய்தார் அவர்.

அரசின் உதவியுடன் இந்த சிறப்பு தேர்வு 2013-2014ம் ஆண்டில், 100 பள்ளிகளைச் சேர்ந்த 1002 மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் 405 பள்ளிகளைச் சேர்ந்த 6,805 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர். 24 தேர்வு மையங்களில் 500 ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.  பொது அறிவுக்கான, உடான் என்ற மாதாந்திர தேர்வு முறையை 2012ம் ஆண்டு முதல் துவங்கினேன் என்று கூறுகிறார் தேவி த்யால். அடுத்த ஆண்டு அரசின் உதவியோடு அந்த தேர்வுகள் நடைபெற்றன. கணிதத்தை எவ்வளவு எளிமையாக அனைத்து மாணவர்களிடம், அதே நேரத்தில் இண்ட்ரெஸ்டிங்காகவும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று யோசித்து உடானில் இருந்து உருவாக்கப்பட்டது தான் இந்த ராமானுஜம் தேர்வுகள்.

இந்த தேர்வுகள் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 2014ம் ஆண்டு நடுநிலை வகுப்புகளிலும், 2015-16 ஆண்டுகளில் 4ம் மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களிடமும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் ஆசிரியர் வேலை மற்றும் பணியிட நியமனம் தொடர்பாக அரசு ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு அவ்வளவு ஆசிரியர்களை ஒருங்கிணைத்து இந்த தேர்வினை நடத்த இயலாது என்று கூறியுள்ளார் த்யால். ஆனாலும் நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெறும் என்றும் உறுதியளித்துள்ளார்.

கணிதம் என்றாலே மிகவும் தொய்வான அதே சமயம் மிகவும் குழப்பான ஒன்று என்ற எண்ணத்தை மாற்றியிருக்கிறது இந்த ராமானுஜம் தேர்வுகள் என்று அரசு பள்ளி ஆசிரியர்களும், அதிகாரிகளும் கூறுகின்றார்கள்.

To read this article in English

தனி நபரின் உழைப்பால் வியந்த அரசு

இது குறித்து பஞ்சாப் மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் ப்ரோஜெக்ட் கோ-ஆர்டினேட்டர் தேவேந்தர் சிங் போஹா கூறுகையில், மாணவர்களை போட்டிக்கு தயார்படுத்துவது மட்டுமின்றி, மாணவர்களுக்கு கணிதம் மீதான ஒரு ஆர்வத்தை உருவாக்கியுள்ளது தேவி த்யால் என்ற ஒற்றை மனிதனின் உழைப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்வுகளில் வெற்றி பெரும் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப்பணம் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் ரூ. 20. முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ. 5,100-ம், இரண்டாம் இடத்திற்கு ரூ. 3,100-ம், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 2,100ம் வழங்கப்படுகிறது.

நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ, 3,100ம், இரண்டாம் பரிசாக ரூ. 2,100ம், மூன்றாம் பரிசாக ரூ. 1,100ம் வழங்கப்படுகிறது. ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 2,100ம், இரண்டாம் பரிசாக ரூ. 1,100ம் , மூன்றாம் பரிசாக ரூ. 800ம் வழங்கப்படுகிறது. முதல் 21 இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் என்ன கூறுகிறார்கள் ?

இது குறித்து பவனிகர் பகுதியில் இருக்கும் பள்ளி ஆசிருயர் ஹரிஷ் குமார் கூறுகையில், இந்த தேர்வுகள் மூன்று விதமாக நடைபெறும். 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு ஒரு தேர்வு, 6 முதல் 8 வகுப்பினருக்கு ஒரு தேர்வு, 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தேர்வு என்று இந்த தேர்வு முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றனர்.

90 நிமிடங்கள் நடைபெறும் இந்த தேர்வில், சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓ.எம்.ஆர். ஷீட்களில் தான் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்க வேண்டும். ப்ரைமரி ஸ்கூல் மாணவர்களுக்கு 60 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 3 மதிப்பெண்கள். ஆனால் ஒவ்வொரு தவறான விடைக்கும் 1 மதிப்பெண்கள் கழிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தான் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது என்பதால் கேள்விகள் அனைத்தும் பெரும்பாலும் பஞ்சாபி மொழியில் மட்டுமே கேட்கப்படுகிறது.

இந்த தேர்வுகளை நடத்த 3 லட்சம் வரையில் செலவாகிறது. அதில் 1.35 லட்சம் வரையான நிதியை நாங்கள் தேர்வு விண்ணப்ப கட்டணமாக பெற்றுக் கொள்கின்றோம். மீத தொகையை ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மக்கள் நன்கொடையாக வழங்குகின்றனர். மாநில கல்வித்துறையும் பள்ளிகளுக்கான கட்டுமானம் மற்றும் இதர வசதிகளை பெறுவதற்கு போதுமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்கிறார் த்யால்.

இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் என்ன கூறுகிறார்கள் ?

ஃபேக்ட்ரி ஒர்க்கரின் மகன் சன்னி குமார். 10ம் வகுப்பு படிக்கும் போது நடத்தப்பட்ட இந்த தேர்வில் கலந்து கொண்டு 300 மதிப்பெண்களுக்கு 228 மதிப்பெண்கள் பெற்றார். இதனை அறிந்த சண்டிகரில் இயங்கி வரும் கோச்சிங் செண்டர் சன்னிக்கு இலவசமாக 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான கோச்சிங்கை கொடுக்கிறது. இந்த கணிதத்தேர்வு என்னுடைய வாழ்வை மாற்றிவிட்டது என்று அவர் கூறுகிறார். நாங்கள் பிகாரில் பிறந்து வளர்ந்தவர்கள். 10ம் வகுப்பு படிக்கும் போது வாழ்வில் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. இந்த தேர்வில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தேன். தற்போது நான் மூன்றாம் ஆண்டு பி.டெக் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன் என்று அவர் கூறினார்.

விவசாய கூலி வேலை பார்ப்பவரின் மகனான அமர்ஜீத் சிங் தற்போது காலேஜ் இறுதி ஆண்டு படித்து வருகிறார். எங்களுடைய பள்ளியில் கணித ஆசிரியர் மாற்றல் ஆகி சென்ற பிறகு வேறு ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. பின்பு நான் கணிதத்தை இணைய உதவியாலும், ஓய்வு பெற்ற ஆசியர்களின் உதவியாலும் கற்றுக் கொண்டேன், தற்போது இந்த தேர்வு எனக்கு மிகவும் எளிமையானதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் ஜஸ்ப்ரீத் சிங் கூறுகிறார்.

Ramanujar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment