பஞ்சாப் ஆம் ஆத்மி முதல் அமைச்சர் பகவந்த் மானுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் வெள்ளிக்கிழமை (ஆக.25) அதிகரித்தது.
மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியடைந்து உள்ளது” என நம்ப காரணம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) ஆட்சியை பரிந்துரைப்பேன் என்றும் குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை புரோகித், மானிடம் கோரியிருந்தார்.
இதற்கு மாநில ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது. அதில், “மாநில அரசு சட்டத் திட்டத்துக்கு உள்பட்டு செயல்படுகிறது. கவர்னர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால் அது பாஜக ஆளும் மணிப்பூரில் செய்யலாம்” எனக் கூறியுள்ளது.
இதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம், “ஆம் ஆத்மி அரசு வேண்டும் என்றே மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
ஆளுனர் பகவந் மானுக்கு எழுதிய கடிதத்தில் முந்தைய கடிதங்களுக்கும் இன்னமும் பதில் வரவில்லை எனக் சுட்டிக் காட்டியிருந்தார்.
தொடர்ந்து, “எனது கடிதங்களுக்கு பதிலளிக்கவும், நான் கேட்ட தகவல்களை எனக்கு வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் கூறியிருந்தார்.
மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 167ஆவது பிரிவு, “மாநிலத்தின் நிர்வாகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஆளுநர் கோரும் படி வழங்குவது” முதலமைச்சருக்கு கட்டாயமாக்குகிறது என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக, லூதியானாவில் போதைப்பொருள் விற்பனை செய்ததற்காக 66 மதுபானக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையையும் அவர் மேற்கோள் காட்டினார்.
இதற்கிடையில், ஆளுநரின் கடிதங்களை "காதல் கடிதங்கள்" என்று மான் அழைத்தார். முதல்வர் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்த புரோஹித், “உங்கள் கீழ்த்தரமான கருத்துக்கள் மூலம், அரசியலமைப்பின் 167 வது பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வமான அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க முயற்சித்தீர்கள். நான் அவ்வாறு செய்ய விரும்பினால், அத்தகைய நடவடிக்கை IPC இன் பிரிவு 124 இன் கீழ் நடவடிக்கைக்கான காரணத்தையும் வழங்கலாம் என எச்சரித்தார்.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசுகளின் செயல்பாட்டில் தலையிட பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டியது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங் கூறுகையில், பகவந்த் மான் தலைமையிலான அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது.
மேலும், “"கவர்னர் ஒழுக்கத்தை பேண வேண்டும், 356வது பிரிவின் அச்சுறுத்தலைக் கொடுக்கக்கூடாது. அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியை விதிக்க விரும்பினால், அது மணிப்பூர் மற்றும் ஹரியானாவில் செய்யப்பட வேண்டும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.