Top School Education Rankings News in Tamil : மத்திய கல்வி அமைச்சகம், கல்வி செயல்திறன் தர குறியீட்டின் சமீபத்திய புள்ளி விவரங்களுடன் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சண்டிகர் மத்திய பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு, தேசிய சாதனைகள் கணக்கெடுப்பு, மதிய உணவு, பொது நிதி மேலாண்மை அமைப்பு மற்றும் ஷாகுன் போர்டல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பள்ளி கல்வியில் செயல்திறன் மதிப்பிடப்படுகிறது. இவை அனைத்தும் பள்ளி கல்வித் துறையால் பராமரிக்கப்படுகின்றன. கல்வி செயல்திறன் தர குறியீட்டு கணக்கெடுப்பில், அணுகல், உள்கட்டமைப்பு, பங்கு மற்றும் கற்றல் முடிவுகள் உள்ளிட்ட 70 அளவுருக்களில் மொத்தம் 1,000 புள்ளிகள் மூலம் கணக்கிடப்படுகின்றன.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், புதுச்சேரி, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரக்குறியீட்டு மதிப்பெண்ணானது, கடந்த ஆண்டுகளை காட்டிலும் 10 சதவீதம் அல்லது 100 மதிப்பெண்கள் என்ற அளவில் மேம்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் தர வரிசைப் பட்டியலில், 1++ இடத்தை சண்டிகர், குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பிடித்தன. இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பில், குஜராத் இரண்டாவது தரம் 1+ தரத்தைப் பெற்று 2-வது இடத்தையும், அதன் பிறகு, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், புதுச்சேரி மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளில் 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட முன்னேற்றத்தை எட்டியுள்ளன. அதே நேரத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் ஒடிசா ஆகியவை தர ஆய்வில், தங்கள் மதிப்பெண்களை 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் மேம்படுத்தியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் தங்களது கல்வி செயல்திறன் வசதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தை எட்டியுள்ளன. ஆளுமைச் செயல்பாட்டில், 19 மாநிலங்கள் 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil