Advertisment

'ஏஜென்டால் 3,000 டாலருக்கு விற்கப்பட்டோம்': லிபியாவில் இருந்து திரும்பிய பஞ்சாப் இளைஞர்கள் குமுறல்

சமீபத்தில் லிபியாவில் இருந்து பஞ்சாப் திரும்பிய இளைஞர்கள் தங்களின் ஏஜென்டுகளால் தலா 3,000 டாலருக்கு விற்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Punjab youths returned from Libya sold by agents for $3,000 Tamil News

Gurpreet Singh of Noorpur Rajput village, Kapurthala, who returned from Libya, said that he went to Dubai in December last year for a driver's job. (Image/Bloomberg/File)

Punjab youths who returned from Libya claim they were sold for $3,000 Tamil News: கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஃபில்லூரைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவருக்கு துபாயில் வீட்டுப் பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த ஜலந்தரைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர், அவரை 13,000 திர்ஹமுக்கு (சுமார் ரூ. 3 லட்சம்) விற்றதாகக் கூறி, அப்பெண் தீவிர துயரத்தில் (எஸ்ஓஎஸ்) இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது லிபியாவில் இருந்து பஞ்சாப் திரும்பிய இளைஞர்கள் தங்களின் ஏஜென்டுகளால் தலா 3,000 டாலருக்கு க்கு விற்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

Advertisment

மேலும், தங்களை ஒரு நிறுவனத்திற்குள் பணயக்கைதிகளாக வைத்திருந்ததாகவும், அடிமைகளைப் போல வேலை செய்ய வைக்கப்பட்டதாகவும் அந்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று செவ்வாயன்று சில இளைஞர்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் சரியான நேரத்தில் தலையிட்டு தங்களை தங்கள் நாட்டிற்கு அழைத்து வர உதவியதாகக் கூறினர்.

விவரங்களின்படி, லிபியாவின் பெங்காசியில் அமைந்துள்ள எல்சிசி சிமென்ட் நிறுவனத்தில் கூலி வேலை செய்ய இளைஞர்கள் அனைவரும் அங்கு சென்றுள்ளனர். இருப்பினும், லிபியாவை அடைந்த உடனேயே அவர்கள் தங்கள் ஏஜென்டால் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதைக் கண்டறிந்தனர். அந்த நிறுவனம் தங்களை 18 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய வற்புறுத்தியது என்றும் என்றும், சில நேரங்களில் அவர்களுக்கு உணவு அல்லது தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்றும் அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவில் இருந்து திரும்பிய கபுர்தலா, நூர்பூர் ராஜ்புத் கிராமத்தைச் சேர்ந்த குர்பிரீத் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் ஓட்டுநர் வேலைக்காக துபாய் சென்றதாகக் கூறினார். ஆனால் அவர் துபாய் சென்றடைந்தவுடன், அவர் பல இளைஞர்களுடன் லிபியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

“லிபியாவை அடைந்த பிறகு நான் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் தங்குவதற்கு இடமில்லை. எங்களிடம் சாப்பிட எதுவும் இல்லை. நாங்கள் பல நாட்கள் கெட்டுப்போன உணவையே உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். நாங்கள் பணிபுரிந்த நிறுவனம் எங்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. அவர்களை எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டனர்.

நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறோம் என்று நாங்கள் கூறியபோது, ​​நாங்கள் தலா 3,000 டாலர்களுக்கு விற்கப்பட்டோம் என்று நிறுவன அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். அங்கிருந்து வெளியேற நாங்கள் அவர்களுக்கு தலா 3,000 டாலர்கள் கொடுக்க வேண்டும். ”என்று குர்ப்ரீத் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment