Advertisment

கேரளாவில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு; கொரோனா இரண்டாம் அலையும் முக்கிய காரணம்

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் கேரளாவில் மொத்தமாக 1,55,520 நபர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இது 2020ம் ஆண்டு பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் (1,15,081) 35% அதிகமான இறப்புகளாகும்.

author-image
WebDesk
New Update
கேரளாவில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு; கொரோனா இரண்டாம் அலையும் முக்கிய காரணம்

Shaju Philip 

Advertisment

Kerala all-cause deaths set for record high : கொரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக இந்த ஒரே ஆண்டில் கேரளாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (கொரோனா அற்ற காரணங்கள் உட்பட) புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் கேரளாவில் மொத்தமாக 1,55,520 நபர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இது 2020ம் ஆண்டு பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் (1,15,081) 35% அதிகமான இறப்புகளாகும். 2019ம் ஆண்டு ஏற்பட்ட இறப்புகள் (1,28,667) இறப்புகளைக் காட்டிலும் இந்த ஆண்டு பதிவான இறப்புகள் 21% என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு என்பது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கொரோனா தொடர்பான மரணங்கள் உட்பட பதிவான இறப்புகளின் மொத்த எண்ணிக்கை ஆகும்.

கடந்த ஆண்டுகளின் மே மற்றும் ஜூலை மாதங்களை ஒப்பிடுகளையில் இந்த ஆண்டு ஏற்பட்ட மரணங்களின் அளவு அதிகமாகும் என்பதை மாநிலத்தின் தலைமை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரின் தரவு காட்டுகிறது.

2021ம் ஆண்டு ஜூன் மாதம் சமீபத்திய ஆண்டுகளில் அதிக அளவு மரணங்கள் பதிவு செய்யப்பட்ட மாதமாக உள்ளது. மொத்தமாக இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் 32,501 நபர்கள் பலியாகியுள்ளனர். 20640, 20642 என்பது முறையே 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு 57% கூடுதலாக ஜூன் மாதத்தில் மரணங்கள் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் பதிவான இழப்புகளின் எண்ணிக்கை 28,684 ஆகும். இது 2020ம் ஆண்டு மே மாதம் (21,488) ஏற்பட்ட இறப்புகளைக் காட்டிலும் 33.4% அதிகமானது. 2019ம் ஆண்டு ஏற்பட்ட மரணங்களைக் காட்டிலும் (22,984) இது 24.8% ஆகும்.

இந்த இரண்டு மாதங்களில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களையும் அதிகமாக சந்தித்தது கேரளா. 150 முதல் 200 மரணங்கள் நாள் ஒன்றுக்கு நிகழ்ந்தன. மே 1 முதல் ஜூலை 1 முதல் 7927 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதாரத்துறை அசல் பட்டியலை திருத்தி பதிவு செய்யப்படாத நபர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட எண்ணிக்கை இதுவாகும்.

publive-image

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர்கள் குழு நடத்திய விசாரணையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ பதிவு மிகவும் குறைவாக உள்ளது என்று கூறியது. ஆனால், இந்தியா இறந்ததைக் கணக்கிடும் முறையைப் பொறுத்து, குறைந்தபட்சம் ஒரு வருடத்தில் எவ்வளவு என்று மட்டுமே மதிப்பிட முடியும்.

விசாரணையின் ஒரு பகுதியாக, செய்தித்தாள் பல மாநில அரசாங்கங்களை அணுகியது, அவற்றில் கேரளா உட்பட 8 மாநிலங்கள், சிவில் பதிவு முறைப்படி இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பதிவு செய்த இறப்புகளின் பதிவுகளை வழங்கியது. 2021ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மே 30 வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புகளில் இருந்து உத்தியோகபூர்வ கோவிட் இறப்புகள் அகற்றப்பட்ட பிறகு, 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட இறப்புகளைக் காட்டிலும் இறப்புகள் 1.23 மடங்கு அதிகமாக இருப்பதாக கேரளாவின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கொரோனா தொற்று துவங்கியதில் இருந்து இதுவரை கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 41,831 (டிசம்பர் 8 வரை) ஆக பதிவு செய்துள்ளது கேரள அரசு. மேல் முறையீடுகள் மூலமாக இதில் 12,161 நபர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

2020ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கேரளாவில் ஏற்பட்ட மரணங்களில் கொரோனா ஊரடங்கின் தாக்கம் தெளிவாக தெரிந்தன. முறையே 16,176 மற்றும் 13,338 மரணங்கள் பதிவாகின. ஆனாலும், இந்த ஆண்டில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 24,632 மற்றும் 21,231 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2019ல் 2,70,567 ஆக இருந்த தொற்றுநோயின் முதல் ஆண்டான 2020ல் கேரளாவில் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 2,53,638 ஆகக் குறைந்துள்ளது என்று தரவு காட்டுகிறது. இருப்பினும், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், செப்டம்பர் 30 வரை, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இறப்பு எண்ணிக்கை 2,12,712 ஆக குறிக்கப்பட்டுள்ளது.

இறப்புகளை தாமதமாகப் பதிவு செய்வதைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் இறுதி புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, கேரளாவில் கட்டாயமாக்கப்பட்ட 21 நாட்கள் கண்காணிப்பில் ஏற்பட்ட மரணங்களில் 65 சதவீத இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2021ம் ஆண்டு பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை மற்றொரு முக்கிய விவரத்தையும் விவரிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் கேரளாவில் முதல் 6 மாதங்களில் பதிவாகும் இறப்புகளைக் காட்டிலும் ஜூலை முதல் டிசம்பர் மாதம் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது 2020ம் ஆண்டிலும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில், 2019உடன் ஒப்பிடும்போது அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மாநிலம் அறிவித்தது. இன்னும் மூன்று மாத தரவு பதிவு செய்யப்பட உள்ளது, நிபுணர்கள் மொத்த எண்ணிக்கையை பெற்றால் அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

2009ஆம் ஆண்டு முதல் அனைத்துக் காரணமான இறப்புத் தரவுகள், 2015ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு எண்ணிக்கை 2.50 லட்சத்திற்கு மேல் உள்ளதை தெளிவாக காட்டுகிறது. இதற்கு மாநிலத்தில் உள்ள வயதானவர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. கோவிட் -19 இறப்புகளை மட்டும் பார்க்காமல், குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் மொத்த இறப்புகளின் அடிப்படையில் எந்தவொரு தொற்றுநோயையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை கூறி வருகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment