Sreenivas Janyala
தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் தனது புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: Pushpa 2 actor Allu Arjun arrested over Hyderabad stampede that left woman dead, son critical
இந்த நெரிசலில் சிக்கி 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.
சந்தியா தியேட்டர் நிர்வாகம், நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். படத்தின் பிரீமியர் காட்சிக்கு படக்குழு வருவார்கள் என்று காவல்துறைக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் இருந்து அல்லு அர்ஜூனை வெள்ளிக்கிழமை காவலில் எடுத்தனர்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் நேரத்தில், ஹைதராபாத் காவல்துறையின் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அக்ஷன்ஷ் யாதவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் BNS பிரிவு 105 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலைக்கான தண்டனை) மற்றும் 118(1) r/w 3(5) (தன்னிச்சையாக காயப்படுத்துதல் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திரையரங்குக்குள் ஒருவரின் மரணம் மற்றும் பிறருக்கு காயம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் குழப்பமான சூழ்நிலைக்கு காரணமான அனைத்து நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“