Advertisment

புஷ்பா 2 ஸ்கிரீனிங் கூட்ட நெரிசல் வழக்கு: சிறையில் இரவைக் கழித்த அல்லு அர்ஜுன் விடுதலை

வெள்ளிக்கிழமையன்று ஜாமீன் கிடைத்தாலும், அதற்கான ஆவணங்கள் இரவில் தான் சிறை அதிகாரிகளுக்கு சென்றடைந்ததால், அந்த இரவை அல்லு அர்ஜூன் சிறையில் கழிக்க நேரிட்டது; தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
allu arjun release

அல்லு அர்ஜூன் விடுதலை

Sreenivas Janyala

Advertisment

இந்த மாத தொடக்கத்தில் அவரது திரைப்படமான புஷ்பா 2 பிரீமியர் காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில், தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் அவருக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு நாள் கழித்து, ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறைச்சாலையிலிருந்து தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் சனிக்கிழமை காலை சுமார் 6:40 மணியளவில் வெளியில் வந்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: Pushpa 2 screening stampede case: Allu Arjun released after spending night in jail

வெள்ளிக்கிழமையன்று ஜாமீன் கிடைத்தாலும், அதற்கான ஆவணங்கள் இரவில் தான் சிறை அதிகாரிகளுக்கு சென்றடைந்ததால், அந்த இரவை அல்லு அர்ஜூன் சிறையில் கழிக்க நேரிட்டது. கைதிகளை இரவில் விடுவிக்க முடியாது என சிறை கையேட்டில் கூறப்பட்டுள்ளது. 50,000 ஜாமீன் தொகையை அல்லு அர்ஜுன் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment
Advertisement

ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடிகர் அல்லு அர்ஜூன் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். கீழமை நீதிமன்றம் அல்லு அர்ஜுனை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைத்ததால், சஞ்சல்குடா சிறைக்கு போலீஸார் அல்லு அர்ஜுனை அழைத்துச் செல்லும் போது இடைக்கால ஜாமீன் உத்தரவு வந்ததும் நாடகம் அரங்கேறியது.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில், டிசம்பர் 4 ஆம் தேதி இரவு புஷ்பா 2 இன் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 39 வயதான எம்.ரேவதி உயிரிழந்தார் மற்றும் அவரது ஒன்பது வயது மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எம்.ரேவதியின் கணவர் எம்.பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பி.என்.எஸ் பிரிவுகள் 105 (கொலை அல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை) மற்றும் 118(1) r/w 3(5) (தன்னிச்சையாக காயப்படுத்துதல் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமையும் சந்தியா தியேட்டர் நிர்வாகத்துக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரீமியருக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கடிதம் சமர்ப்பித்ததாக தியேட்டர் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் மத நிகழ்ச்சிகளின் வருகையை மேற்கோள் காட்டி, பாதுகாப்பு வழங்க பல கோரிக்கைகளை பெறுவதாக காவல்துறை பதிலளித்தது. அமைப்பாளர்கள் எந்த அதிகாரியையும் நேரில் சந்திக்கவில்லை என்றும், "கடிதத்தை உள் பிரிவில் சமர்ப்பித்துள்ளனர்" என்றும் போலீசார் தெரிவித்தனர்.

"அவர் (அல்லு அர்ஜுன்) தியேட்டருக்கு வந்து, தனது வாகனத்தின் சன்ரூப்பில் இருந்து வெளியே வந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கைகளை அசைக்கத் தொடங்கினார். இந்த சைகை பொதுமக்களை தியேட்டரின் பிரதான வாயிலை நோக்கி ஈர்த்தது. அதே நேரத்தில், அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள் அவரது வாகனத்திற்கு வழி செய்ய மக்களைத் தள்ளத் தொடங்கினர். பெரிய கூட்டத்தைக் காரணம் காட்டி அவரைத் திரும்ப அழைத்துச் செல்லுமாறு அவரது குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை, அல்லு அர்ஜுன் தியேட்டருக்குள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தார்,” என்று காவல்துறை அறிக்கை கூறியது.

“எனவே, போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது தெளிவாகிறது, (மற்றும்) இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு வழிவகுத்தது, ஒரு பெண் இறந்தார், மேலும் அவரது மகன் சம்பவம் நடந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகும் வென்டிலேட்டரில் மயக்கத்தில் இருக்கிறார்,” என்று அறிக்கை மேலும் கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pushpa 2 The Rule Allu Arjun
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment