லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, " அரசு திட்டங்களில் ஊழல் செய்த முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்" என்று கூறினார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சிராங் பாஸ்வான் அறிவித்தார்.
பக்சார் சட்டமன்றத் தொகுதியில் டும்ரான் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாஸ்வான் உரையாற்றினார். அப்போது, " நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பீகார் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். முதல்வர், அரசு அதிகாரிகள் அனைவரும் ஊழல் செய்திருப்பது நிருபிக்கப்பட்டால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். நிதிஷ் குமார் போன்ற முதல்வரால் தான் பீகாரின் எண்ணற்ற இளைஞர்கள் புலம் பெயர்ந்து மற்ற மாநிலங்களுக்கு செல்வதாகவும்" தெரிவித்தார்.
இதற்கிடையே, பிஹாரில் சீதாமாரி பகுதியில் தேர்தல் பிராச்சாரத்தில்ற்கிடையே பேசிய பாஸ்வான், சீதாவின் பிறப்பிடமாக மதிக்கப்படும் சீதாமாரியில் அவர் நினைவாக பெரிய கோவில் கட்டப்படும் என்று உறுதி அளித்தார்.
பீகார் தேர்தலுக்குப் பின் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சரும், பிஜேபி மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டவுடன் பீகாரில் உள்ள அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும் என்ற உறுதிமொழியை பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பிஜேபி தெரிவித்தது.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியும், முன்னதாக நவாடா, பகல்பூர் மாவட்டங்களில் தமது தேர்தல் பிரச்சாரத்தை உரையாற்றுனார்.
ராஷ்டீரிய ஜனதா தள் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தது.